Kulfi ice-கோடை காலம் துவங்கி விட்டாலே நம் நாவறட்சியை போக்க தொண்டைக்கு இதமாக குளுகுளுவென ஐஸ்கிரீம்களையும்,குல்பிகளையும் தேடி ஓடுவோம் . இனிமேல் வீட்டிலேயே சூப்பரா குல்பி செய்யலாம்.அதை பற்றி இப்பதிவில் பார்ப்போம் .
ரஸ்கை இரண்டும் மூன்றாக உடைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சர்க்கரை ஏலக்காய் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 300 எம்எல் பாலை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்கவும், சிறிது நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள ரஸ்க் பொடியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.
இப்போது தீயை அதிகப்படுத்தி நன்கு கொதிக்க விடவும். இவை கெட்டி பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, நன்கு ஆற வைத்து மிக்ஸியில் ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
பிறகு வீட்டில் உள்ள டீ டம்ளர்களில் இந்த ரஸ்க் கலவையை ஊற்றி அதிலே நம் தேவைக்கேற்ப முந்திரி பிஸ்தா பாதாம் ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி ஒவ்வொரு டம்ளரிலும் சேர்க்கவும்.
பிறகு அந்த டம்ளர் மேல் பாலித்தீன் கவரை மூடி லஃபர்பான்ட் போடவும். அப்போதுதான் ஐஸ் படியாமல் இருக்கும். அந்த பாலித்தின் கவரின் நடுவில் ஐஸ் குச்சியை சொருகி ஃப்ரிட்ஜில் ஆறு மணி நேரம் வைத்து விட வேண்டும். ஆறு மணி நேரம் கழித்து எடுத்தால் குளு குளுவென குல்பி ரெடி.
இதுபோல் இனிமேல் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்து கொடுத்து அசத்துங்கள், அடிக்கும் வெயிலுக்கு இதமாகவும் இருக்கும்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…