ஆஹா .!இறாலை வைத்து பிரியாணி கூட செய்யலாமா ?
இறால் பிரியாணி- சுவையான இறால் பிரியாணி செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்;
- இறால் =500 கிராம்
- மஞ்சள் தூள் =1 அரை ஸ்பூன்
- மிளகாய்த்தூள் =2 ஸ்பூன்
- மல்லி தூள் =2 ஸ்பூன்
- பிரியாணி மசாலா =1 ஸ்பூன்
- தக்காளி =2
- வெங்காயம் =2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் =2 ஸ்பூன்
- பச்சைமிளகாய் =2
- புதினா கொத்தமல்லி =1 கைப்பிடி
- எண்ணெய்=5 ஸ்பூன்
- நெய் =2 ஸ்பூன்
- சோம்பு =1 ஸ்பூன்
- ஏலக்காய் =3
- கிராம்பு =3,பட்டை =1 துண்டு ,பிரியாணி இலை=1
- எலுமிச்சை சாறு =1 ஸ்பூன்
- பாசுமதி அரிசி =2 கப்
செய்முறை;
முதலில் ஒரு பாத்திரத்தில் 500 கிராம் இறால் எடுத்துக் கொள்ளவும் .அதனுடன் இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன் , மிளகாய் தூள்1 ஸ்பூன் , மல்லித்தூள் 1 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்த இறாலை மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு , பிரிஞ்சிஇலை, ஏலக்காய் , சோம்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது, புதினாவையும் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கவும். பின்பு மிளகாய்த்தூள் மல்லி தூள், மஞ்சள் தூள் ,பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும். அதனுடன் வேக வைத்துள்ள இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் எண்ணெயில் வேக வைக்கவும் பின்பு இரண்டு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றவும். அதனுடன் இரண்டு கப் பாஸ்மதி அரிசி கழுவி சேர்த்து சிறிதளவு எலுமிச்சை சாறையும் சேர்க்கவும். பின்பு மூடி போட்டு மூடி இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு இறக்கி சிறிதளவு கொத்தமல்லி புதினா நெய் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான இறால் பிரியாணி தயார்.