பேரிச்சம் பழத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதை நாம் பொதுவாக பாலில் ஊற வைத்து அல்லது தேனில் ஊற வைத்தோ சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று பேரிச்சம் பழத்தை வைத்து பச்சடி எப்படி செய்வது என்று காண்போம்.
தேவையான பொருள்கள்:
பேரிச்சம்பழம்=1/4கிலோ
நல்லெண்ணெய்=200 ml
கடுகு= ஒரு ஸ்பூன்
வெந்தயம்= ஒரு ஸ்பூன்
மிளகு =ஒரு ஸ்பூன்
தக்காளி =இரண்டு
பெரிய வெங்காயம்= இரண்டு
மிளகாய் பொடி=1 ஸ்பூன்
கரம் மசாலா= ஒரு ஸ்பூன்
மல்லித்தூள்= அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய்= இரண்டு
நாட்டு சக்கரை= 3 ஸ்பூன்
செய்முறை:ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் மிளகு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்டையும் சேர்க்கவும் அதனுடன் மிளகாய் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து கூடவே கொட்டை நீக்கி ஊறவைத்த பேரிச்சம் பழத்தை மசிந்து அதில் சேர்த்து வதக்கவும். பிறகு அதிலே கரம் மசாலா மல்லித்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பிறகு கடைசியாக புளியை சேர்த்து நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சுவையான பேரிச்சம் பழம் பச்சடி தயார்.
பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள்:
பேரிச்சம் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து ,விட்டமின் ஏ, விட்டமின் கே, விட்டமின் சி, அயன், புரோட்டின், பினாலிக் அமிலம், காப்பர், செலினியம், போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
பயன்கள்:
பேரிச்சம் பழத்தை நாம் தினமும் மூன்றிலிருந்து நான்கு பழம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் அதுவே நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பை தடுக்கிறது மேலும் மூளையை சுறுசுறுப்பு ஆகும்.
உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் இரவில் தேனில் ஊறவைத்து அல்லது பாலில் ஊற வைத்தோ நான்கு எடுத்துக்கொண்டு வரலாம். இது கணிசமாக உடல் எடையை கூட்டும்
வெள்ளைச் சக்கரைக்கு மாற்றாக பேரிச்சம் பழத்தை கூட நாம் பயன்படுத்தலாம். சாக்லேட் கேட்டும் கேட்கும் குழந்தைகளுக்கு இந்த பேரிச்சம் பழத்தை கொடுக்கலாம் ஏனென்றால் இவற்றில் இயற்கையாகவே இனிப்பு சுவை அதிகம் நிறைந்துள்ளது.
இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். விட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளதால் கண் பார்வையை கூர்மையாக்கும்.
கோளின் என்ற ஊட்டச்சத்து அதிகம் உள்ளது இது மூளையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை கொடுக்கும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நினைப்பவர்கள் பேரிச்சம் பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரலாம். மேலும் இது ரத்தத்தில் உள்ள கிருமிகளை சுத்திகரிக்கும்.
முடிகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் முடி வளர்ச்சியை தூண்டும். இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
குளிர்காலத்தில் நம் உடலில் மெட்டபாலிசம் குறைவாக இருக்கும் பேரிச்சம் பழத்தை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் மெட்டபாலிசம் தூண்டப்படுகிறது. குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.
இதில் உள்ள ப்ரோட்டின் எலும்புகளுக்கு நல்ல பலத்தை அளிக்கிறது.
பக்க விளைவுகள்:
நான் பேரிச்சம் பழத்தை ஒரு நாளுக்கு மூன்றிலிருந்து நான்கு பழம் மட்டுமே எடுத்துக் கொண்டு வர வேண்டும். சக்கரை வியாதி இருப்பவர்கள் இரண்டு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் குறைவான முறையில் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு மேலிருக்கும் தோலை நீக்கிவிட்டு கொடுக்க வேண்டும்.
பேரிச்சம் பழத்தை நாம் வாங்கும் போது கொட்டையுடன் கூடிய பேரிச்சம்பழமே வாங்க வேண்டும். மேலும் அதன் மீது எண்ணெய் சேர்த்து பளபளப்பாக இருந்தால் அதை நாம் வாங்குவதை தவிர்க்கவும். பல் சொத்தை இருப்பவர்கள் மிக குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.
ஆகவே தினமும் நாம் பேரிச்சம் பழத்தை இரண்டு என்ற அளவில் எடுத்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…