அட… இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா..? கட்டாயம் சாப்பிடுங்க..!
சுண்டைக்காய் என்பதில் நம்மில் சிலருக்கு இன்றும் தெரியாமல் கூட இருக்கிறது. பெரும்பாலும் கிராம புறங்களில் இந்த காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. இந்த காயில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த காயை, காயவைத்து பொரித்து சாப்பிடலாம், அல்லது கூட்டு, குழம்பாக வைத்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் சுண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.
செரிமான பிரச்சனை
செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த உணவாகும். இந்த காயில் உள்ள நார்சத்து, செரிமானத்தை அதிகரிக்க செய்து, குடல் இயக்கத்தை சீராக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அழற்சி எதிர்ப்பு
சுண்டைக்காயில் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் அதிகமாக காணப்படுகிறது. உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழற்சியை குறைக்க உதவுகிறது. மேலும், இது கை, கால்களில் ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வயிற்றுப் புழுக்களை அகற்ற உதவுகிறது.
கருவாட்டுக் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க! டேஸ்ட் சும்மா ஜம்முனு இருக்கும்!
நோய் எதிர்ப்பு சக்தி
நமது உடலில் பிற நோய்கள் அணுகாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவுபடும் பட்சத்தில், எளிதில் நாம் நோய்வாய்ப்பட்டு விடுவோம்.
இந்த காயை நமது உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, இது சுண்டைக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நோய்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
உடல் எடை குறைப்பு
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள நார்சத்து, பசி உணர்வை குறைக்கிறது. எனவே உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இது ஒரு சிறந்த உணவாகும்.
இந்த காயில் லேசான கசப்பு தன்மை காணப்படுவதுண்டு. எனவே பெரும்பாலானவர்கள் இதை உணவில் சேர்ப்பதை தவிர்ப்பர். ஆனால், நமது உடலின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள், இதனை உடலில் சேர்ப்பது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள் சுண்டைக்காயை உண்பதற்கு முன் மருத்துவரின், அறிவுரையை பெறுவது நல்லது.