அடேங்கப்பா ..பிரட்ல கூட பக்கோடா செய்யலாமாம்..! அது எப்படிங்க?
சென்னை -இல்லத்தரசிகளே .. டீ போடும் நிமிஷத்தில் இந்தப் பிரட் பக்கோடாவை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்..
பிரட் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்;
- பிரட் =10 துண்டுகள்
- பெரிய வெங்காயம்= மூன்று
- பூண்டு= ஏழு
- இஞ்சி= ஒரு துண்டு
- அரிசி மாவு =மூன்று ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு
- பச்சை மிளகாய் =இரண்டு
- மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
- கரம் மசாலா= அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள்= கால் ஸ்பூன்
- எண்ணெய் =தேவையான அளவு
செய்முறை;
பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்து கொள்ளவும். இப்போது வெங்காயத்தை நீள் வாக்கில் நறுக்கி அந்த பிரட் துண்டுகளுடன் சேர்க்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை இடித்து சேர்த்துக் கொள்ளவும். பிறகு அரிசி மாவு ,தேவையான அளவு உப்பு கொத்தமல்லி இலைகள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. பிரட்டில் உள்ள தண்ணீரே போதுமானதாக இருக்கும். தேவை என்றால் தெளித்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்போது கிரிப்சியான பக்கோடா ரெடி..