அடேங்கப்பா ..!ஒருவரின் குணத்தை அறிய பிளட் குரூப்பே போதுமா ?.. அது எப்படி?

Published by
K Palaniammal

Blood group- உங்கள் ரத்த வகையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.. வாருங்கள் அதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

ரத்த வகையை வைத்து எப்படி ஒருவரின் குணத்தை கூற முடியும் ..இது என்ன ஜோசியமா ஜாதகமா என்று கூட சிலர் நினைப்பீர்கள்.. இது ஜோசியமோ ஜாதகமோ இல்லை. “உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல் உன் ரத்த வகை என்னவென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்பதும் உண்மைதான்.

1920 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள டெர்கெஜி  புருக்கவா என்ற ப்ரொபசர் பல வருட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ரத்த வகையை வைத்து ஒருவரின் பர்சனாலிட்டியை கூறிவிட முடியும் என்று கூறுகிறார். இதை ஜப்பானியர்கள் நம்பி வாழ்க்கை முறையிலும் கடைப்பிடிக்கிறார்கள்.அவர்கள் மட்டுமல்லாமல்  கொரியா, தைவான் போன்ற நாடுகளும் இந்த பிளட் குரூப் தியரியை கடைபிடிக்கின்றனர் .

O வகை ரத்தம் ;

இந்தியாவில் 48 சதவீதம் மக்கள்  O ரத்த வகை சேர்ந்தவர்கள். இதில் 35 சதவீதம்  O பாசிடிவ் மக்களும் 13 சதவீதம்  O நெகட்டிவ் மக்களும் உள்ளனர். இந்த பிளட் குரூப்பை சேர்ந்தவர்களுக்கு அல்சர் மற்றும் காலரா பாதிப்புகள் வர அதிக வாய்ப்புள்ளது என ஆய்வு அறிக்கை   கூறுகிறது. மேலும்  O பிளட்  குரூபை   சேர்ந்தவர்களைத்தான் கொசுக்கள் தேடி கடிக்குமாம் .

பர்சனாலிட்டி;

இந்த  O ரத்த வகை சார்ந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் அதிகமாக இருக்கும் .கடுமையான வேலைகளை செய்வதில் சிறந்தவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். தனக்கு பிடித்தவர்களிடம் மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் சிறிது சுயநலம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இருந்தாலும் தன்னை நம்பி இருப்பவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள் .இவர்களுக்கு புதிய ஐடியாக்கள் இருக்கும் ஆனால் அதை செயல்படுத்தாமல் தவறவிடுவார்கள்.

O பாசிடிவ் ரத்த வகையைச் சார்ந்தவர்கள்  O+ , A+ ,B+,AB+  என இந்த ரத்த வகையினருக்கு  ரத்தம் கொடுக்கலாம். ஆனால் இவர்கள் O+ மற்றும் O நெகட்டிவ் உள்ளவர்களிடம் மட்டுமே பெற முடியும்.

O நெகட்டிவ் ரத்த வகையைச் சார்ந்தவர்கள் அனைத்து ரத்த வகையினருக்கும் கொடுக்கலாம். ஆனால் O நெகட்டிவ் ரத்த வகையிடம்   மட்டுமே பெற முடியும்.

A பிளட் குரூப்;

இந்தியாவில் 38 சதவீதம் மக்களுக்கு A வகை ரத்தம் உள்ளது. இதில் A பாசிடிவ் 30 சதவீத மக்களுக்கும் A நெகட்டிவ் 8% மக்களுக்கும் உள்ளது.

பர்சனாலிட்டி;

இவர்கள் பயங்கரமான இன்டெலிஜென்ட் ஆகவும் ,உருவாக்கும் திறன், பொறுப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் ஒரு விஷயத்திற்கு ஆசைப்பட்டால் அதை எப்படியாவது அடைய முயற்சி செய்வார்கள் .ரூல்ஸை  முறையாக கடைப்பிடிப்பவர்கள். ஒருவரை நம்பி விட்டால் அவர்களுக்கு விசுவாசம் ஆகவும் உண்மையாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு பிடித்தவர்கள் பொய் கூறி ஏமாற்றினால் மிக வருத்தப்படுவார்கள். ஏனெனில் இந்த வகை பிளட் குரூப் உள்ளவர்களுக்கு கார்டிசோல்  என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகம் சுரக்கும்.

A பாசிடிவ் ரத்த வகை சார்ந்தவர்கள் A+மற்றும் B+ரத்த வகையினருக்கு  ரத்தத்தை கொடுக்கலாம் . ஆனால் A பாசிடிவ் ,A நெகட்டிவ், O பாசிட்டிவ் O நெகட்டிவ் இந்த ரத்த வகையினரிடம் இருந்து ரத்தத்தை பெற்றுக் கொள்ளலாம்.

A நெகட்டிவ் உள்ளவர்கள் A பாசிடிவ் A நெகட்டிவ், AB பாசிடிவ், AB  நெகடிவ் இவர்களுக்கு ரத்தத்தை கொடுக்கலாம். ஆனால் A நெகட்டிவ் மற்றும் O நெகட்டிவ் இவர்களிடம் இருந்து மட்டுமே ரத்தத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

B வகை ரத்தம்;

இந்தியாவில் 10 சதவீதம் மக்களுக்கு இந்த ரத்த வகை உள்ளது .இதில் எட்டு சதவீதம் மக்களுக்கு B பாசிட்டிவ், இரண்டு சதவீதம் மக்களுக்கு B நெகடிவ் ரத்தம்  உள்ளது. இந்த பிளட் குரூப்பை சார்ந்தவர்களுக்கு இருதய கோளாறு மற்றும் கருப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இவர்கள் உடலில் 50,000 க்கும் மேல் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் இது இவர்களுக்கு ஒரு அட்வான்டேஜ் ஆகும்.

பர்சனாலிட்டி;

இந்த ரத்த வகை சார்ந்தவர்கள் நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள், உருவாக்கும் திறன் அதிகமாக இருக்கும். மேலும் ஏதேனும் ஒரு குறிக்கோள் உடனே இருப்பார்கள். இவர்கள் சற்று சுயநலமாக இருப்பார்கள். பார்ப்பதற்கு அழகாகவும் மற்றவர்களை கவரக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

B பாசிடிவ் ரத்த வகை சேர்ந்தவர்கள் B பாசிடிவ், A பாசிடிவ் போன்றவர்களுக்கு ரத்தத்தை கொடுக்கலாம்.ஆனால் B பாசிடிவ், B நெகடிவ் ,O பாசிடிவ், O நெகட்டிவ் இவர்களிடமிருந்து ரத்தத்தை பெற்றுக் கொள்ளலாம்.

B நெகடிவ் உள்ளவர்கள் B பாசிடிவ், B நெகடிவ் ,AB  பாசிட்டிவ் AB நெகட்டிவ் இவர்களுக்கு ரத்தத்தை கொடுக்கலாம் .ஆனால் B நெகட்டிவ் O நெகட்டிவ் இவர்களிடமிருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

ஏபி இரத்த வகை;

இந்தியாவில் மூன்று சதவீதம் மக்களுக்கு தான் இந்த வகை ரத்தம் உள்ளது. அதில் இரண்டு சதவீதம் மக்களுக்கு AB  பாசிட்டிவ், ஒரு சதவீத மக்களுக்கு  AB நெகட்டிவ் உள்ளது . A மற்றும் B ரத்த வகை கொண்டவர்களுடைய குண நலன்களை கலந்து காணப்படுவார்கள்.

அதனால் இவர்களை புரிந்து  கொள்வது கடினமாக இருக்கும். தந்திர  மூளைக்காரர்கள்  என்று கூட சொல்லலாம். மேலும் இவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். மற்றவர்களிடம் உதவி கேட்காமல் தன்னுடைய வேலையை தானே செய்து கொள்வார்கள். ஆனால் இவர்களுக்கு ஞாபக மறதி இருக்கும். இதனால் மற்றவர்கள் பார்வையில் இவர்கள் பொறுப்பெற்றவர்களாக திகழ்வார்கள்.

AB பாசிடிவ் உள்ளவர்கள் AB பாசிட்டிவ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரத்தத்தை கொடுக்க முடியும். ஆனால் அனைத்து ரத்த வகையையும் பெற்றுக் கொள்ளலாம்.

AB  நெகட்டிவ் உள்ளவர்கள் AB பாசிடிவ் AB நெகடிவ் உள்ளவர்களுக்கு ரத்தத்தை கொடுக்கலாம். ஆனால் AB நெகட்டிவ் , பி நெகடிவ், O நெகட்டிவ் இவர்களிடம் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே ரத்தம் என்பது நம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சத்துக்களையும் ஆக்சிசனையும் கடத்துவதற்காக மட்டுமல்லாமல் நம்முடைய குண நலன்களையும் தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது.

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago