அடேங்கப்பா.. இது தெரிஞ்சா இனிமே வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம்..!

neem soap

Homemade soap-வீட்டிலேயே எளிமையான பொருட்களை வைத்து சோப்பு தயார் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்;

  • வேப்பிலை =ஒரு கைப்பிடி அளவு
  • துளசி = 20 இலைகள்
  • குப்பைமேனி =20 இலைகள்
  • தேங்காய் எண்ணெய்= அரை ஸ்பூன்
  • கிளிசரின் =[soap base] 100 கிராம்

செய்முறை;

துளசி, வேப்பிலை, குப்பைமேனி இலைகளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் .அரைத்தவற்றை ஒரு துணியில் சேர்த்து துகள்கள் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை சூடேற்றி அதில் கிளிசரினை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அது சூடான பாத்திரத்தில் சேர்க்கும் பொழுது உருக தொடங்கிவிடும். நன்கு உருகி  பிறகு வடிகட்டி வைத்துள்ள சாரை 30 மில்லி அளவு அதிலே சேர்த்து கலந்து கொள்ளவும்.அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும் .

இதை தயாரிக்க இரண்டு நிமிடம் எடுத்துக் கொண்டாலே போதுமானது .அதிக நேரம் சூடுபடுத்த கூடாது. இப்போது இவற்றை சோப் அச்சில் [soap mode] சேர்க்கவும் . இந்த சோப் தயாராக மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

சோப் நன்கு  கெட்டித்தன்மை வந்தவுடன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு முன்பே எடுத்து விடக்கூடாது. ஏனென்றால் கிளிசரினில் உள்ள ரசாயனமும் நாம் சேர்த்துள்ள இலைகளில் உள்ள ரசாயனமும் வினைபுரிந்து ஜீரோ கெமிக்கலுக்கு மாற வேண்டும்.

அப்படி மாறுவதற்குள் நாம் எடுத்து பயன்படுத்தினால் தோளில் எரிச்சலை ஏற்படுத்தும் .அதனால் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த சோப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆயுர்வேத முறைப்படி சோப் தயாரிப்பதில் இரண்டு விதம் உள்ளது .

அதில் கோல்ட் ப்ராசஸ் [cold process]மற்றும் ஹாட் ப்ராசஸ் [ hot process]என உள்ளது. நாம் தயாரித்துள்ள முறை ஹார்ட் ப்ராசஸ் ஆகும்.இதில் வேப்பிலை, குப்பைமேனி சேர்த்துள்ளதால் அரிப்பு அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்தலாம் .மேலும் முகப்பருவிற்கும் ஒரு நல்ல தீர்வை தரும்.

எனவே கடைகளில் கிடைக்கும் அதிகம் கெமிக்கல் உள்ள சோப்களை பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி சோப் செய்து பயன் பெறுங்கள் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்