பிரியாணி சுவையாக இருக்க இந்த ஒரு பொருளை சேர்த்துக்கோங்க..!
Chicken Biriyani -குக்கரில் பிரியாணி குழையாமல் இருக்கவும் ,பிரியாணி சுவையாக இருக்கவும் எப்படி செய்யலாம் என இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் =அரை கிலோ
- அரிசி =2 கப் [அரைகிலோ ]
- சின்ன வெங்காயம் =10
- தக்காளி =6
- இஞ்சி பூண்டு விழுது =3 ஸ்பூன்
- பச்சை மிளகாய் =2
- நெய் =3 ஸ்பூன்
- எண்ணெய் =150 g
- தயிர் =2 ஸ்பூன்
- பிரியாணி பொடி =2 ஸ்பூன்
- சிக்கன் பொடி =2 ஸ்பூன்
- பிரியாணி இலை 2,கிராம்பு 2,பட்டை 1 இன்ச்,ஏலக்காய் =3
- புதினா 1 கைப்பிடி ,கொத்தமல்லி 1 கைப்பிடி
- சோம்பு =1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசியை கழுவி விட்டு ஊற வைக்கவும் ,அப்போதுதான் அரிசி உடையாமல் இருக்கும். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை சேர்த்து காய்ந்ததும் சோம்பு ,பட்டை ,கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும். அதனுடன் வெங்காயம் ,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்த்து வதக்கவும்.
பிரியாணி சுவையாக இருக்க தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். தக்காளி வதங்கியவுடன் புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும், வதங்கியதும் பிரியாணி மசாலா, சிக்கன் மசாலா ,மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி தயிரை சேர்த்து கலந்து விட்டு சிக்கனை சேர்த்து மசாலா படும் வரை கிளறிவிட்டு 4 கப் தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து சரி பார்த்துக் கொள்ளவும் .
இப்போது அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் குக்கர் மூடி போட்டு இரண்டு விசில் விட்டு மூன்றாவது விசில் வருவதற்கு முன்பே அடுப்பை அணைத்து விடவும். பிறகு விசில் அடங்கியதும் திறந்து பார்த்தால் சுவையாக கமகமவென பிரியாணி தயாராகி இருக்கும்.