Adai : அடிக்கடி இட்லி, தோசை சாப்பிட்டு சலித்து போய்விட்டதா..? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க..!

Adai

நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் காலை மற்றும் இரவு டிபனுக்கு இட்லி மற்றும் தோசையை தான் அடிக்கடி செய்து சாப்பிடுவதுண்டு. அடிக்கடி இப்படி சாப்பிடுவதால், நமக்கு சலித்து போய்விடும். எனவே நாம் புதிய வகையான உணவுகளை தயார் செய்து சாப்பிட முயற்சிக்க வேண்டும்.

புதிய உணவுகளை தயார் செய்து சாப்பிடும் போது, அடிக்கடி ஒரே உணவை சாப்பிட்ட உணர்வு இருக்காது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் புரோட்டீன் நிறைந்த அடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • இட்லி அரிசி – ஒரு கப்
  • பச்சரிசி – முக்கால் கப்
  • உளுத்தம் பருப்பு – முக்கால் கப்
  • துவரம் பருப்பு – முக்கால் கப்
  • கடலை பருப்பு – முக்கால் கப்
  • பாசி பயிறு – முக்கால் கப்
  • வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • சின்னவெங்காயம் – 30
  • சீரகம் – 2 டீஸ்பூன்
  • வர மிளகாய் – 4
  • கறிவேப்பிலை – 3 கொத்து
  • பெருங்காயம் – சிறிய துண்டு
  • உப்பு – 1 டீஸ்பூன்

இதையும் படியுங்கள் : என்னது..! பருப்பு இல்லாம சாம்பார் வைக்கலாமா..? அது எப்படிங்க..?

Adai செய்முறை : 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை மாவு, பாசிப்பயறு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு அதனுள் தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு இடையில் ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம், சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 4 மணி நேரத்திற்கு பின்பு ஊற வைத்துள்ள அரிசியுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய் கலவையை உள்ளே போட்டு மொத்தமாக அடை செய்யும் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அடை மாவை புளிக்க வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. அரைத்த உடனே நாம் அடை சுடலாம் அரைத்து எடுத்த மாவை தோசை கல்லில் எண்ணெய் தடவி அடை வடிவில் ஊற்றி அதனை சரியான பதத்திற்கு எடுத்து பரிமாறலாம்.

அடிக்கடி இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்து போனவர்கள் இந்த அடையை செய்து பார்க்கலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்களை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய அருமையான சுவையில் இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்