தொப்பையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! உங்களுக்காக தான் இந்த பதிவு..!

weightloss

நமது உடல் எடையை குறைக்கக்கூடிய பானங்கள் பற்றி பார்ப்போம்

இன்று அதிகமானோர் வீட்டில் செய்யக்கூடிய உணவுகளை விட, தெருவோரங்களில் விற்கப்படக்கூடிய பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால், நமது உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, நமது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் நம்மில் பலர் தொப்பையை அக்குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதுண்டு.

தொப்பையைக் குறைப்பது மிகவும் முக்கியமானது மற்றும் கொஞ்சம் கடினமானது. இதற்கு உணவுமுறை உட்பட ஒரு ஒழுங்குமுறையான செயல்பாடுகள் இருக்க வேண்டும். தொப்பையை குறைக்க முதலில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். தற்போது இந்த பதிவில் நமது உடல் எடையை குறைக்கக்கூடிய பானங்கள் பற்றி பார்ப்போம்.

கிரீன் டீ 

tea
tea [Imagesource : Timesofindia]

க்ரீன் டீயில் பாலிஃபீனால் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சீன ஆய்வில், கிரீன் டீ உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது. இது அதிகப்படியான பசி ஏற்படுவதை அத்தடுக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.

இலவங்கப்பட்டை தேநீர்

Cinnamon
Cinnamon[Imagesource : Representative]

இலவங்கப்பட்டை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு மசாலா. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதிலும், இன்சுலின் எதிர்ப்பை (IR) குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இலவங்கப்பட்டை மன உளைச்சலை கட்டுப்படுத்துகிறது. இது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலைக் குறைக்கிறது. இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

ஐந்து இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. பல நூற்றாண்டுகளாக அதன் ஆரோக்கிய நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஒரு கப் இலவங்கப்பட்டை டீயைக் குடிப்பது, கூடுதல் கொழுப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவும்.

தேன் 

honey
honey [Imagesource : Representative]

தேன் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. அதனால் அதிகப்படியான பசியை தடுக்கிறது என்று கூறப்படுகிறது. ஒரு நல்ல ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், உள்ளுறுப்பு கொழுப்பு செல்கள் உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்க்கிறது.

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க விரும்புபவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்