இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள்!
இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள்.
இன்று இளைஞர்களில் பெரும்பாலானோர் புகைப்பழக்கத்திற்கும், மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர். அதிலும் அதிகமானோர் புகைப்பழக்கத்திற்கு தான் அடிமையாகியுள்ளனர். புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினர் நாகரீகமாக கருதுகின்றனர்.
தற்போது இந்த பதிவில், இன்றைய இளம் தலைமுறையினரை புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து காக்க்கும் 8 வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
வழிமுறைகள்
- நம்மை சுற்றி உள்ளவர்கள் புகை பிடிக்காமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
- மற்றவர்களுக்கு புகை பிடிப்பதின் தீமைகள் மற்றும் உடல்நலக்கேடுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
- சிறுவர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க, அவர்களை மிரட்டாமல், அவற்றின் தீமைகளை எடுத்துக் கூற வேண்டும்.
- புகைப்பிடிப்பதால், நாம் நம் அன்றாட வாழ்வில் தேவையில்லாமல் எவ்வளவு பணத்தை செலவு செய்கிறோம் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.
- புகைப்பிடிக்கும் பழக்கத்தால், பற்களில் ஏற்படும் கறை, கெட்ட வாடை, களைப்படைதல் ஆகியவற்றை பற்றி எடுத்து கூற வேண்டும்.
- சிகரெட் வேண்டாம் என முடிவெடுத்த பின், அந்த பழக்கத்திலிருந்து மற்ற எந்த தீய பழக்கங்களுக்கும் அடிமையாக கூடாது என முடிவெடுக்க வேண்டும்.
- ‘புகை நமக்கு பகை’ என்ற பழமொழியின் விளக்கத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
- புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளில் குழந்தைகளை கலந்துகொள்ள செய்ய வேண்டும்.