தூக்கமின்மை பிரச்சனையா? நிம்மதியான தூக்கத்தை பெற 5 எளிய வழிகள்.!
தூக்கமின்மை டிப்ஸ் : ஆரோக்கியமான வாழ்க்கை முறை கடைபிடிப்பதில் தூக்கமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தூக்கம் என்பது உடல் மற்றும் மன சுகாதாரத்தை பராமரிக்க உதவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவருக்கு போதுமான தூக்கம் இருந்தால் மட்டுமே உடலின் சரியான செயல்பாட்டிற்கும், மனதின் சமநிலையையும் பாதுகாப்பாக இருக்கும். இல்லையெனில் பெரிய பாதிப்பிற்கு வழிவகுக்ககூடும்.
தூக்கம் உடலின் உடல் மற்றும் நரம்பியல் முறைகளை புதுப்பிக்க உதவுகிறது. இதன் மூலம், வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன, இதனால் உடல் நன்கு பராமரிக்கப்படுகிறது. இதை தவிர, சரியான அளவு தூக்கம் மனநிலை மற்றும் மனவிகாரத்தை மேம்படுத்துகிறது. தூக்கமின்மை மனஅழுத்தம், கவலை, மற்றும் மனநிலை சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.
இந்த தூக்கமின்மை போக்க மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் பல்வேறு வாழ்வியல் நடைமுறைகளை கூறி வருகின்றனர். அதில் சில எளிய வழிகள் இதில் காணலாம்…
நேரத்தை பின்பற்றுதல் :
தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதும், ஒரே நேரத்தில் எழுவதும் உற்சாகமான தூக்க முறை கடைபிடிக்க உதவும். வார இறுதிகளில் கூட இந்த நேரத்தை பின்பற்றுவது முக்கியம். இதன் மூலம் நல்ல துக்கத்தை பெறலாம்.
தூங்கும் இடத்தை மெருகேற்றுதல்:
தூங்கும் அறையை குளிராகவும், அமைதியாகவும், இருண்டதாக வைக்கவும். இது உங்கள் தூக்கம் வருவதை வழி வகுக்கும். மேலும், தங்கும் அறையில் தூங்குவதற்கு ஏதுவான மெத்தையை பயன்படுத்தவும்.
மின்னணு சாதனங்களை தவிர்த்தல்:
தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் டிவிக்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவை அனைத்தும் தூக்கம் வருவதை தடுக்கும் நீல ஒளியை வெளிப்படுத்துகிறது. இதனால், உங்கள் தூக்கம் கெடும். தூங்கவதற்கு முன் அதனை தவிருங்கள், நல்ல தூக்கத்தை பெறுங்கள்.
தூக்கத்தை வரவழைக்கும் செயல்கள்:
தூங்குவதற்கு முன்பு புத்தகம் வாசிப்பு, மெலடி பாடல்கள் கேட்குதல் அல்லது மெதுவாக மூச்சு விடுதல் போன்ற செயல்களை செய்து மனதையும் உடலையும் அமைதியாக்ககூடும். இதன் மூலம் நல்ல தூக்கத்தை பெறலாம்.
உணவு முறைகள்:
தூங்குவதற்கு முன்பு சரியான அளவு கொண்ட உணவை உண்ண வேண்டும். அதிகளவு உணவு உட்கொள்வதை தவிர்க்கவும், இது செரிமானம் ஆவதற்கும் தூக்கம் வரவைப்பதை நேரமாக்கும். மேலும், பாஸ்ட் புட் உணவு வகைகளை அதிகளவு எடுப்பதையும், அளவாக எடுப்பதையும் பார்த்து கொள்ளுங்கள்.
மேலே குறிப்பிட்டபடி டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் தூக்கத்தின் தரம் மேம்படும், நீங்கள் அதிக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெறக்கூடும்.