உங்கள் பெர்சனாலிட்டியை வளர்த்தி கொள்ள நச்சுனு 5 டிப்ஸ்!

Personality Development

பெர்சனலிட்டி டெவலப்மென்ட்: நம்மில் பலருக்கும் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் (Personality Development) என்றால் நல்ல காசு உள்ளவர்களுக்கும், நல்ல ஆடைகள் அணிபர்கள் மற்றும் அழகாய் இருப்பவர்களுக்கும் உடையது என நாம் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம். அது ஒரு தவறான சிந்தனை தான். பெர்சனாலிட்டி என்பது நம் எல்லாருக்கும் உள்ளேயும் அது இருக்கும். அதை எப்படி வளர்த்து கொள்ளவது என்பதை பற்றிய ஒரு 5 முக்கிய டிப்ஸ்ஸை இதில் பார்ப்போம்.

உடல் மொழி (Body Language)

ஒரு இடத்திற்கு தகுந்தவாறு நமது உடலின் மொழியை மாற்றி கொள்ள வேண்டும். ஏனென்றால் உடல் மொழி என்பது நமது பெர்சனலிட்டியை வளர்த்து கொள்ள மிக முக்கியமான ஒன்றாகும். அதாவது நாம் ஒரு பொது இடத்தில் செல்கிறோம் என்றாலோ, அல்லது தெரியாதவருடன் பழகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ அதற்கு ஏற்றவாறு நாம் நமது உடல் மொழியை அமைத்து கொள்ள வேண்டும்.

அதே போல, உடல் மொழியில் மிக முக்கியமானது முகபாவனை தான். ஒரு உதாரணமாக, நமக்கு தெரியாத ஒருவரோ அல்லது தெரிந்த ஒருவரோ நம்மிடம் பேசுகிறார்கள் என்றால் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் அதனை முகத்தில் காட்டாதவாறு நம் நடந்து கொள்ள வேண்டும். அதே போல முடிந்த அளவுக்கு பொது இடங்களில் செல்லும் போது முடிந்த அளவிற்கு நம்மிடம் இருக்கும் நல்ல துணி ஏதாவது ஒன்றை அணிந்து செல்ல வேண்டும், அது நம் மீது உள்ள முதல் அபிப்ராயத்தை கூட்டும்.

மனதை ஒருநிலை படுத்தவேண்டும்

நாம் மனம் இதனை குறித்து அதிகமாக சிந்திக்கிறதோ அதற்கு ஏற்றவாறு நாம் நம் மனதை ஒருநிலை படத்தவேண்டும். இப்படி செய்வதனால் சில முக்கியமான பொது இடங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் நீங்கள் உங்கள் சிந்தனையை சிதறவிடாமல், அந்த  முடிவை எடுக்க முடியும்.

இதன் மூலம் நீங்கள் பிறருக்கு ஒரு எடுத்துக்காட்டாக கூட திகழ்வீர்கள். மனதை ஒரு நிலை படுத்துவதற்கு பயிற்சியாக தியானம், அல்லது நமக்கு பிடித்தமான இசையை கூர்ந்து கேட்பது என பலவித பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் போக போக அது நம் கட்டுக்குள் வந்துவிடும்.

கருத்தை கவனித்தல்

ஒரு பொது இடத்தில் அல்லது நம்மை விட வயதில் உயர்ந்தவரோ அல்லது வயதுக்கு கீழ் உள்ளவர்களோ நமக்கு எதிரில் பேசுகிறார்கள் என்றால் அதனை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்கள் கூறும் கருத்தை, அவர்கள் பேசி முடிக்கும் வரை கூர்ந்து கவனிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வயதில் சின்னவன் தானே என்றும், நமக்கு தான் எல்லாம் தெரியுமே என்ற கர்வம் இருந்து விட கூடாது அப்படி இருந்தால் அது நம் வளர்ச்சிக்கு பெரிய இடியாக வந்து நிற்கும்.

நம் வயதில் குறைந்த ஒரு சிறுவனாக இருந்தால் கூட நமக்கு தெரியாத ஒரு சில விஷயங்கள் அவரிடம் தெரிந்திருக்கலாம். அதனால் எதிரில் இருப்பவர்கள் பேசி முடிக்கும் வரை, குறுக்கிடாமலும், கேள்வி எழுப்பாமலும் இருத்தல் வேண்டும். இது நமது பெர்சனாலிட்டியை வளர்ப்பதோடு நமது பொறுமையின் சக்தியையும் அதிகப்படுத்தும்.

குறை கூறுவது & கேட்பது இருக்க கூடாது

பெர்சனாலிட்டியை அதிகப்படுத்த, முதலில் இதை நாம் முற்றிலும் விட வேண்டும். நாம் வாழ்க்கையில் வளர்கிறோம் என்றால் சுற்றி உள்ள சமுதாயம் நம்மை குறை கூறுவது சகஜம் தான். ஆனால், நாம் அதனை முற்றிலும் விட வேண்டும். அது நமது நண்பர்கள் யாரோ சொன்னார்கள் என எந்த ஒரு நபரை பற்றிய ஆதாரம் இல்லாமல் கூறும் விவரம் எதுவாக இருந்தாலும் அதனை காது கொடுத்து கேட்க கூடாது. அதே நேரம் எந்த நபரை பற்றியும் ஆதாரம் இல்லாமல் நாமும் பிறரிடம் குறை சொல்லக்கூடாது.

இது நமது நேரத்தை முற்றிலும் வீணாக்கி விடும். மேலும், ஒரு கட்டத்தில் உங்கள் மீது கூட யாராவது புறம் கூறினால் அதை ஏற்று கொள்ள நம் மனம் வாராது. இது போன்ற மன வலிமை இல்லாதவர்களை தற்கொலைக்கு கூட அது தூண்டி விட்டு விடும். இதனால் கண்ணால் பார்க்காமலோ, காதல் கேட்காததையோ யாரிடமும் கேட்டகவும் கூடாது, யாரடிமும் பேசவும் கூடாது. எந்த இடத்தில், என்ன தேவையோ அதை அளவாக தான் பேசவேண்டும்.

எதிர்மறை உணர்வுகள் (Negative Emotion)

எதிர்மறை உணர்ச்சிகள் என்றால் நம் மனதில் நமக்கே தோன்றும் தேவை இல்லாத எண்ணங்கள். உதாரணமாக, நாம் நல்ல ஆடை அணிந்திருப்போம், நன்றாகவே பேசுவோம் ஆனாலும் நம் மனதிற்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். நாம் நல்ல ஆடைதான் அணிந்திருக்கிறோமா? நாம் நன்றாக பேசுவோமா? யாராவது என்ன நினைப்பார்கள்? இது போன்ற எண்ணங்களை நம் மனதிற்குள் ஒரு போதும் விதைக்க கூடாது.

இப்படி செய்வதனால் நமக்கு இருக்கும் குறைந்த அளவிலான பாசிட்டிவ் தன்மையை கூட இழந்து விடுவோம். இது போன்ற பலருக்கும் இருக்கும் இதை ஒரேடியாக நினைத்தால் ஒன்றும் குறைக்க முடியாது. சிறிதுசிறிதாக கட்டுப்படுத்தி மட்டும் தான் முற்றிலும் அகற்ற முடியும்.

மேல் கூறிய 5 டிப்ஸ்களும் அடிப்படையான ஒன்று தான் ஆனால் மிகவும் முக்கியமான ஒன்று இதை தகுந்த பயிற்சிகள் எடுத்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இதை கற்றுக்கொண்டாலே நீங்களும் சமூகத்தில் ஒரு தனி ஆளாக திகழ்வீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்