காய்ச்சலை குறைக்க நாம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!
மழைக்காலம் என்றாலே காய்ச்சல், சளி, இருமல் என தோற்று நோய்கள் பரவ தொடங்கிவிடுகின்றன. இவை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் தாக்கும்.
அதன் காரணமாக மருத்துவ மனைக்கு வீட்டுக்கும் அலைச்சல் ஏற்படும். இந்த அலைச்சலை தவிர்த்து வீட்டுலே காய்ச்சலின் நிலையை குறைக்க 5 வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
காய்ச்சலை குறைக்க உதவும் 5 வழிகள்:
1.காய்ச்சலுக்கு ஈரத்துணி வைத்து ஒத்தடம்
- காய்ச்சலை உடனடியாக குறைக்கவும், அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் துணியை நன்றாக தண்ணீரில் நனைத்து பிழிந்து பின்னர் நெற்றியில் ஒற்றி எடுக்க வேண்டும்.
2.நீர்ச்சத்து குறையக் கூடாது
- காய்ச்சலைக் குறைக்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
- நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம்.
3.குளிர்ச்சியான அறை
- அறையை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்
- அது உடலின் வெப்பத்தையும் குறைக்க உதவும்.
4.லேசான உடைகள் அணிதல்
- உடம்புச் சூட்டைக் குறைக்க லேசான உடை அணிய வேண்டும்.
- அதிக கடினமான உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
5.காய்ச்சலுக்கு ஓய்வு
- நல்ல ஓய்வை எடுக்க வேண்டும்.
- முடிந்தவரை அமைதியாக படுத்துத் தூங்குவதுதான் சிறந்த மருந்தாகும்.