பப்ஜி விளையாட்டை இந்தியா முழுவதும் தடை செய்யுங்கள்!!இல்லையென்றால் வழக்கு தொடருவேன்!!மகாராஷ்டிரா முதல்வருக்கு 11 வயது சிறுவன் கடிதம்

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு  பப்ஜி விளையாட்டை தடை செய்யக்கோரி 11 வயது அகாத் என்ற சிறுவன் கடிதம் எழுதியுள்ளான்.

உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும்  தற்போது ஸ்மார்ட் போன் என்ற சிறிய உலகத்தில் பயணித்து வருகிறது.2017 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து  தரப்பினரின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் தடை  செய்ய வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.இதன்விளைவாக  பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பப்ஜி விளையாட்டை தடை செய்யக்கோரி, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு  11 வயது அகாத் என்ற சிறுவன் கடிதம் எழுதியுள்ளான். அதில் இந்த விளையாட்டை உடனடியாக நம் நாட்டில் தடை செய்ய வேண்டும். வன்முறை, கொலை என குழந்தைகளுக்கு பொருத்தமில்லாத தவறான பல அம்சங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளான்.மேலும் அவ்வாறு விதிக்கப்பட வில்லை என்றால் நான் சட்டபூர்வமாக உங்கள் மீது வழக்கு தொடர உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளான் சிறுவன் அகாத்.

Leave a Comment