வாரிசு வசூலை மிஞ்சிய ‘லியோ’! அடுத்த டார்கெட் ‘விக்ரம்’ படத்திற்கு தான்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19-ஆம் தேதி வெளியான லியோ படம் மக்களின் பேராதரவோடு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி வசூல் செய்து முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை புடைத்திருந்தது.

இந்த நிலையில், லியோ திரைப்படம் வெளியான 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான 4 நாட்களில் 400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 330 கோடி வசூல் செய்திருந்தது.

வாரிசு திரைப்படம் தான் விஜயின் சினிமா கேரியரில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது வைத்திருந்தது. இந்த நிலையில், லியோ திரைப்படம் வாரிசு திரைப்படத்தின் மொத்த நாள் வசூல் சாதனையை 4 நாட்களிலே முறியடித்து விஜய் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும். லியோ படம் 400 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில், அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறபடுகிறது. விக்ரம் படம் உலகம் முழுவதும் 430 கோடிகள் வசூல் செய்திருந்தது. இந்த வசூல் சாதனையை லியோ முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.