லால் சலாம் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பிரபலங்கள் பலருடைய நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது.

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.!

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். 60  கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்துள்ளது என்றே கூறலாம். விமர்சன ரீதியாக பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களை பெறவில்லை இருப்பினும் சுமாரான விமர்சனங்களை பெற்று ஒரு சில திரையரங்குகளில் ஓடிகொண்டு இருக்கிறது.

லால் சலாம் ஓடிடி

லால் சலாம் திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்காதவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். இதனையடுத்து, அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரிமிங் உரிமையை நெட்பிளிக்ஸ்  நிறுவனம் வாங்கி இருக்கிறது.

படம் திரையரங்குகளில் வெளியான 60 நாட்கள் பிறகு தான் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்து இருந்ததாம். ஆனால், தற்போது படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு குறைந்துள்ள காரணத்தால் படத்தின் ஓடிடியில் படத்தை முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளதாம். அதன்படி, படம் தற்போது வரும் மார்ச் 3-ஆம் தேதி அல்லது 9-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment