புங்கை மரத்தின் அசர வைக்கும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

புங்கை மரம் -புங்கை மரத்தின் சிறப்புகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

புங்கை மரத்தின் சிறப்புகள்:

புங்கை மரத்தை புங்கன் மரம் என்றும் கூறுவார்கள் .அழிந்து வரும் மரங்களில் புங்கை மரமும் ஒன்று. புங்கை மரம் வேப்ப மரத்திற்கு சமமான மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.

இந்த மரத்தில் பூக்கள்  மார்ச், ஏப்ரல் மாதங்களில்  பூத்துக் குலுங்கும்.இதன் இலைகள் உரமாக பயன்படுத்தப்படுகிறது. எவ்வளவு வறட்சியான இடங்களிலும் தாண்டி வளரக்கூடியது.

சூரிய புற ஊதா கதிர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.மேலும் புங்கை புண்ணாக்கு யூரியாவுக்கு இணையான சத்துக்களை கொண்டுள்ளது.மண் அரிப்பை தடுக்கக்கூடியது .

புங்கை மரத்தின் பயன்கள்:

புங்கை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இயல்பு என்னவென்றால் வளிமண்டலத்தில் உள்ள 72 சதவீதம் நைட்ரஜனை அதன் இலைகள் தேக்கி வைத்துக் கொள்ளும்.

ஒரு ஆராய்ச்சியின் படி மீத்தேன் ஐசோ சயனைடு என்ற ஒரு விஷ வாயுவை தனக்குள்  கிரகித்துக் கொண்டு மனிதர் குலத்தை  உயிர் வாழ வைக்கும் தன்மை கொண்டுள்ளது.எனவே அனைவரது வீடுகளிலும் வளர்க்க வேண்டிய மரமாகும் .

புங்கை மரத்தின் எண்ணெய் :

புங்கை மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்  சொரியாசிஸ் போன்ற தோல் வியாதிகள், தீக்காயம், கீழ்வாதம் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. மேலும்  பயோடீசல் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது

புங்கை  இலைகள்:

புங்கை இலைகளை மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பசியின்மை, உடலில் ஏற்படும் கட்டிகள், அரிப்பு போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

மேலும் புங்கை  இலைகளை அரைத்து கொப்புளங்கள் உள்ள இடத்தில் பூசி வர குணமாகும். மேலும் மூலநோய்க்கும் சிறந்த மருந்தாகிறது .

புங்க இலையின் பூக்களை நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தலாம் .

எனவே அழிந்து வரும் புங்கை மரத்தின் பயன்கள் நம்மோடு சென்று விடாமல் நம் தலைமுறைகளுக்கும் எடுத்துச் சொல்வோம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.