விமான விபத்தில் கணவர் இறந்த செய்தி அறியாமலே குழந்தை பெற்றெடுக்க போகும் மனைவி.!

கேரள விமான விபத்தில் இணை விமானி அகிலேஷ் ஷர்மாவும் இறந்துவிட்டார். அவரது மனைவி மேகா கர்ப்பமாக இருப்பதால்,இந்தசோக சித்தி இன்னும் தெரியப்படுத்தாமல் உள்ளது.

கடந்த வெள்ளி கிழமை இரவு கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விமான விபத்தில் இணை விமானி அகிலேஷ் ஷர்மாவும் இறந்துவிட்டார். ஆனால், இவரது இறப்பு செய்தி இன்னும் அவரது மனைவி மேகாவுக்கு தெரியப்படுத்தாமல் உள்ளது. காரணம், மேகா தற்போது நிறைமாத கர்பிணியாக உள்ளார்.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி குழந்தை பிரசவிக்க உள்ளார். மேகா நிறைமாத கர்பிணியாகா உள்ளதால், அவருக்கு கணவர் இறந்த அதிர்ச்சி செய்தி தெரிவிக்கப்படாமல் உள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அகிலேஷ் ஷர்மாவை இழந்துவிட்டோம். மேகாவையும், குழந்தையையும் இழக்க நாங்கள் விரும்பவில்லை. ஆதலால், குழந்தை பிறந்த பிறகே அகிலேஷின் இறப்பு செய்தி மேகாவிடம் தெரிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.