Thursday, November 30, 2023
Homeஇந்தியாகேரள குண்டுவெடிப்பு : உயிரிழப்பு 3ஆக உயர்வு.!

கேரள குண்டுவெடிப்பு : உயிரிழப்பு 3ஆக உயர்வு.!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரி எனும் ஊரில் நேற்று வழக்கம் போல கிருஸ்தவ மத வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. 2000க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கும் போது காலை 9.40 மணி அளவில் தொடர்ந்து 3 குண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டு விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண்மணி உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பில் காயமடைந்தோர்கள், எர்ணாகுளம் மற்றும் களமசேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோர்களில் 7 பேர் பலத்த தீ காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யார் இந்த டொமினிக் மார்ட்டின்? தீவிர விசாரணையில் கேரள போலீஸ்! முழு விவரம்…

இந்த விபத்தில் நேற்று இரவு ஒரு பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உயிரிழப்பை தொடர்ந்து கேரள குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில், கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர், நான் தான் வெடிகுண்டு வைத்தேன் என கூறி திருச்சூர், கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.  வெடிகுண்டு விபத்தை பற்றி முழு விவரம் அறிய 20 பேர் கொண்ட விசாரணை குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. மத்திய அரசு சார்பில் என்ஐஏ அதிகாரிகள் இந்த வெடிகுண்டு விபத்தின் பின்புலம் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது இருந்தார். அதன் படி இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.