அவதூறு பேச்சு! ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார்!

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு பேட்டி ஒன்றில்  கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசினார்.

இந்த விவகாரம் ஒரு பக்கம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தன்னை பற்றி  அவதூறாக பேட்டி அளித்த அரசியல் கட்சி சார்ந்த ஏ.வி ராஜுவ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர்  அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். நடிகை குறித்தும், தன்னை பற்றியும் அவதூறான கருத்துகளை ஏவி ராஜு தெரிவித்துள்ளார்.

தனது பெயரை கெடுக்கும் நோக்கத்தில் ஆதாரமற்ற புகார்களை ஏவி ராஜு கூறியுள்ளார்  எனவும், அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்த ஏவி ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைனில் மூலம் நடிகர் கருணாஸ்  புகார்  அளித்துள்ளார்.

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..! நடிகை திரிஷா விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜு பேட்டி

மேலும், இந்த விவகாரம் குறித்து த்ரிஷா ” கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசும் நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. எனது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கையை எடுப்பார்கள்”  என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து ஏ.வி ராஜு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியீட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment