கர்நாடகா சட்டமன்ற தேர்தல் : ரூ.375 கோடி பணம் பறிமுதல்..!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் : ரூ.375 கோடி பணம் பறிமுதல்..!

election commission

கர்நாடகா தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இதுவரை ரூ.375 கோடிபறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த சில மாதங்களாகவே அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்தது.தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும்  நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க  வேண்டும் என்ற முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் நாளைக்கு காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள் 2430 பேர்,  பெண்கள் 185 பேர் என மொத்தம் 2615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.2 கோடி வாக்காளர்களுக்காக 58 ஆயிரத்து 545 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி  நிலவி வரும் நிலையில், கர்நாடகாவில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலத்தில் கைப்பற்றப்பட்ட பணம் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, இதுவரை ரூ.375 கோடிபறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube