கான்பூர் துப்பாக்கி சூடு.! நக்சலைட்டுகளாக விகாஷ் துபே செயல்பட்டதாக போலீசார் குற்றச்சாட்டு.! 

கான்பூர் ரவுடியை பிடிக்க நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 போலீசார் கொன்ற வழக்கில் விகாஷ் துபே நக்சலைட்டுகளாக செயல்பட்டதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட கான்பூரில் உள்ள பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, அவரை கைது செய்ய 15 பேர் கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனை அறிந்த விகாஷ் துபே மற்றும் அவரது ஆட்கள் , போலீசாரை சுற்றி வளைத்து சுட்டதால்  8 போலீசார் உயிரிழந்தனர்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விகாஷ் துபே வீட்டிலிருந்து ஆயுதங்கள் பலதை கண்டுபிடித்த பின்னர் காவலர்களை தாக்கி, அவர் நக்சலைட்டுகளாக செயல்பட்டார் என்று கூறியுள்ளார். ஆம், விகாஷ் துபே வீட்டிலிருந்து வெடிமருந்துகள், இரண்டு கிலோ வெடி பொருட்கள், ஆறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட கைது துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கான்பூர் கிராமிய காவல்துறை கண்காணிப்பாளர் பி. கே. ஸ்ரீவாஸ்தவா, விகாஷ் துபேவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் அவரை தொடர்புடைய பிற நபர்களின் பெயரில் உரிமம் பெற்றது என்றும், ஆனால் விகாஷ் துபே அதனை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

நக்சலைட்டுகள் எவ்வாறு செயல்படுமோ அதே போன்று விகாஷ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது தப்பி சென்ற விகாஷ் துபேவை போலீசார் வலை விரித்து தேடி வருகின்றனர். மேலும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விகாஷ் துபேயால் இறந்த 8 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.