31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

சென்னையில் கே.பாலசந்தர் நினைவு ‘சதுக்கம்’.. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.!!

மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் நினைவாக சென்னையில் சதுக்கம் என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.

சென்னை மாநகராட்சியின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது.  இந்த கூட்டத்தில் மறைந்த பிரபல இயக்குனரான கே.பாலச்சந்தர் நினைவாக,  சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் உள்ள காவிரி மருத்துவமனை அருகில் 1,000 சதுர அடி அளவில் உள்ள போக்குவரத்து தீவு இடத்திற்கு கே.பாலச்சந்தர் சதுக்கம் என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் மொத்தம் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும், ஏற்கனவே மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அவ்வை சண்முகம் சாலை வி.பி.ராமன் சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மறைந்த பிரபல இயக்குனரான கே.பாலச்சந்தர்க்கு 1,000 சதுர அடியில் சதுக்கம் ஏற்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.