கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொலைப்பேசி மூலம் விசாரணை நடத்தி 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதி

கொரோனா காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  முக்கிய வழக்குகளை தவிர பிற வழக்கு விசாரணை நடைபெற வில்லை.இந்நிலையில் இன்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு அவசர வழக்குகள்  விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா  வழக்குகளை எல்லாம்  வீட்டில் இருந்தபடியே விசாரித்தார். அப்போது அரசு தரப்பு  குற்றவியல் வழக்கறிஞரிடம்  , நீதிபதி வழக்கு குறித்து கருத்து கேட்டார். வழக்கறிஞரின் பதிலின்  அடிப்படையில்,58 வழக்குகளை விசாரித்தார். பல்வேறு  குற்றச்சாட்டுகளில் சிக்கிய 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி  உத்தரவு பிறப்பித்தார்.

 வருகின்ற  ஏப்ரல் 27-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதாகவும், இடைக்கால ஜாமீன் பெற்ற 23 பேரும் தலா ரூ.10,000 சொந்த ஜாமீன் வழங்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் .