பொறியியல் பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல்வேறு நிரந்தர பணிகள்..! விவரங்கள் இதோ…
பொறியியல் பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கீழ் செயல்படும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் (NLC) அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்று 05-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
- நிர்வாகப் பொறியாளர் (மெக்கானிக்கல்) – 31 + 63 காலிப்பணியிடங்கள்.
- துணை பொது மேலாளர் (மெக்கானிக்கல்) – 04 காலிப்பணியிடங்கள்.
- துணை பொது மேலாளர் (மெக்கானிக்கல்) – 01 காலிப்பணியிடங்கள்.
- நிர்வாக பொறியாளர் (மின்சாரம்) – 33 + 24 காலிப்பணியிடங்கள்.
- பொது மேலாளர் (மின்சாரம்) – 01 காலிப்பணியிடங்கள்.
- துணை பொது மேலாளர் (மின்சாரம்) – 02 காலிப்பணியிடங்கள்.
- துணை பொது மேலாளர் (சிவில்) – 03 காலிப்பணியிடங்கள்.
- நிர்வாக பொறியாளர் (சிவில்) – 20 காலிப்பணியிடங்கள்.
கல்வித்தகுதி :
- சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் விவரம் (ஆண்டு அடிப்படையில்) :
- ரூ.12.84 லட்சம் முதல் ரூ.31.53 லட்சம் வரையில்
வயது வரம்பு :
- அதிகபட்ச வயது 30 – 54 (பதவிக்கேற்ற அதிகபட்ச வயது அறிவிக்கப்பட்டுள்ளது )
- இடஒதுக்கீட்டின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
- நேர்முகத்தேர்வு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 05 ஜூலை 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 03 ஆகஸ்ட் 2023.
விண்ணபக்கட்டணம் :
- பொது பிரிவினருக்கு – ரூ.854/-
- SC/ST பிரிவினருக்கு – ரூ.354/-
விண்ணப்பிக்கும் முறை :
- கூடங்குளம், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் அதிகாரபூர்வ தளமான www.nlcindia.inக்கு செல்ல வேண்டும்.
- அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்த பணிக்கு அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் இறுதியில் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
- அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.