முதுகலை பட்டதாரிகளுக்கான UPSC தேர்வுகள்… மொத்த காலிப்பணியிடங்கள் 113.!
முதுகலை பட்டதாரிகளுக்கான UPSC தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கான மொத்த காலிப்பணியிடங்கள் 113 ஆகும்.
இந்தியா முழுக்க பல்வேறு துறைகளில் மூத்த அதிகாரிகளை பணியமர்த்தும் வண்ணம் முதுகலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளை UPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு குறைந்தபட்சம் காலிப்பணிக்கேற்ப முதுகலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்
இம்மாதம் 10ஆம் தேதி துவங்கிய விண்ணப்பிக்கும் தேதியானது, வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிப்போர் விண்ணப்பித்து முடித்து இருக்க வேண்டும். கூடுதல் ஒருநாள் சாவகாசமாக பணம் கட்டுவதற்கு 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணிகள் –
- உதவி பேராசிரியர், பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் என பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
காலியிடங்கள் :
- மொத்தம் 113 (இந்தியா முழுக்க)
கல்வித்தகுதி :
- குறைந்தபட்சம் பணிக்கேற்ற துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கூடுதலாக பணிகேற்ப முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு (அதிகபட்சம்):
- அதிகபட்சம் 40 வயது வரை (அரசு விதிமுறைகள் படி தளர்வு அளிக்கப்படும்).
தேர்வு செய்யப்படும் முறை :
- UPSC இல் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 29 ஜூன் 2023 (தகவல்களை உள்ளீடு செய்ய)
- 30 ஜூன் 2023 (கட்டணம் செலுத்தி இறுதி விண்ணப்பம் பதிவேற்ற)
விண்ணப்பிக்கும் முறை :
- UPSC துறையின் அதிகாரப்பூர்வ தளமான upsconline.nic.in க்கு செல்ல வேண்டும்.
- அதில் 11/2023 இல் உள்ள அறிவிப்பு லிங்குகளில் தாங்கள் விண்ணப்பிக்க வேண்டிய பதவிக்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , முன் அனுபவ சான்றிதழ், உறுதி அறிக்கை) விண்ணப்பிக்கலாம்.
- தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அடுத்தகட்ட தேர்வுக்கான அழைப்பை பெற்று தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும்.
- மதிப்பெண் , முன் அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.