UPSC தேர்வு அறிவிப்பு.! டிகிரி, பொறியியல், LLB முடித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள்.!
பல்வேறு மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கு UPSC தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி, பொறியியல், வழக்கறிஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்க்ளை நிரப்ப UPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிவில், சுரங்கம், விமான பிரிவுகளில் பொறியியல் முடித்தவர்கள், LLB முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 24-ஜூன்-2023 முதல் ஜூலை 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
- விமான தகுதி அதிகாரி -80 .
- விமான பாதுகாப்பு அதிகாரி – 40.
- கால்நடை அலுவலர் – 06.
- இளநிலை அறிவியல் அதிகாரி 05.
- அரசு வழக்கறிஞர் – 23.
- ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி – 86
- உதவி பொறியாளர் தரம்-I – 03.
- உதவி சர்வே அதிகாரி – 07.
- முதன்மை அதிகாரி 01.
- விரிவுரையாளர் – 06.
- விமான தகுதி அதிகாரி – சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் .
- விமான பாதுகாப்பு அதிகாரி – ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டம்.
- கால்நடை அலுவலர் – கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு.
- இளநிலை அறிவியல் அதிகாரி – முதுகலை பொறியியல் பட்டம் (சம்பந்தப்பட்ட துறையில்)
- அரசு வழக்கறிஞர் – எல்.எல்.பி.
- ஜூனியர் டமொழிபெயர்ப்பு அதிகாரி – முதுகலை பட்டம் (சம்பந்தப்பட்ட துறை).
- உதவி பொறியாளர் தரம்-I – இளங்கலை பட்டம் (சம்பந்தப்பட்ட துறை).
- உதவி சர்வே அதிகாரி – BE/ B.Tech (Civil/ Mining Engineering).
- முதன்மை அதிகாரி – முதுகலை பொறியியல் பட்டம் (சம்பந்தப்பட்ட துறையில்).
- விரிவுரையாளர் – MD/ MS
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) – தகுதி, அனுபவம் அடிப்படையில் வழங்கப்படும்.
வயது வரம்பு :
- விமான தகுதி அதிகாரி – 35 ஆண்டுகள்.
- விமான பாதுகாப்பு அதிகாரி -35 ஆண்டுகள்.
- கால்நடை அலுவலர் 06 பட்டம் – 35 ஆண்டுகள்.
- இளநிலை அறிவியல் அதிகாரி – 30 ஆண்டுகள்.
- அரசு வழக்கறிஞர் – 35 ஆண்டுகள் .
- ஜூனியர் டிரான்ஸ்லேஷன் அதிகாரி – 30 ஆண்டுகள்.
- உதவி பொறியாளர் தரம்-I -30 ஆண்டுகள்.
- உதவி சர்வே அதிகாரி – 30 ஆண்டுகள்.
- முதன்மை அதிகாரி – 50 ஆண்டுகள்.
- சிரேஷ்ட விரிவுரையாளர் – 50 ஆண்டுகள்.
- அரசு விதிப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
- UPSC தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணல் வாயிலாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 24 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 13 ஜூலை 2023.
விண்ணபக்கட்டணம் :
- பொதுப்பிரிவு – ரூ.25/-
- SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை .
விண்ணப்பிக்கும் முறை :
- UPSC அதிகாரபூர்வ தளமான www.upsconline.nic.in க்கு செல்ல வேண்டும்.
- அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, இறுதி படிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்ச்சிக்கு பின்னர் பணியமர்த்தப்படுவர்.