10 முடித்தால் போதும்…ரயில் சக்கர தொழிற்சாலையில் பயிற்சியுடன் வேலை.!

rwf bangalore

RWF: ரயில் சக்கர தொழிற்சாலை 2023-24 ஆம் ஆண்டிற்கான பயிற்சிச் சட்டம், 1961 இன் கீழ், இந்த தொழிற்சாலையில், அப்ரெண்டிஸ் வேலைக்கான 192  காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகத்தின் ரயில் வீல் ஃபேக்டரி வெளியிட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை கர்நாடக மாநிலம் யெலஹங்காவில் அமைந்துள்ளது. இந்த இரயில் சக்கர தொழிற்சாலை (RWF), 1984 இல் நிறுவப்பட்ட இந்திய இரயில்வேயின் ஒரு பிரிவாகும்.  இந்நிலையில், இந்த பணியிடங்களுக்கு பயிற்சி பெற்று பணியில் சேர ஆர்வமுள்ள  விண்ணப்பதாரர்கள் https://rwf.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

READ MORE – இன்னும் மூன்றே நாட்கள் தான்…இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்!

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 23-02-2024 அன்று தொடங்கியது, விண்ணப்பிக்கும் கடைசி தேதி 22-03-2024 அன்ற முடிவடைகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல், இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடிவடையும் தேதியில் இருந்து 45 நாட்கள் கிழித்து வெளியிடப்பட்டும்.

தகுதி

விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன், தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வழங்கிய NCVT, (NTC சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

READ MORE – நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.? 

வயது

குறைந்தபட்ச வயது 15 முதல் அதிகபட்ச வயது 24 ஆக இருக்க வேண்டும்.

காலியிட விவரங்கள்

  1. ஃபிட்டர் – 85
  2. மெஷினிஸ்ட் – 31
  3. மெக்கானிக் (மோட்டார் வாகனம்)  – 8
  4. டர்னர் – 5
  5. CNC புரோகிராமிங் கம் ஆபரேட்டர் (COE குழு) -23
  6. எலக்ட்ரீஷியன் -18
  7. எலக்ட்ரானிக் மெக்கானிக் – 22

மொத்தம் 192 காலியிடங்கள் உள்ளது.

சம்பளம்

இத்தொழிற்சாலையில் பயிற்சியின் போது, ஃபிட்டர், மெஷினிஸ்ட், மெக்கானிக் , டர்னர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய பணிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு மாதம் ரூ.12,261 உதவித்தொகை வழங்கப்படும். CNC Programming-cum-Operator, மாதத்திற்கு ரூ.10,899 உதவித்தொகை வழங்கப்படும்.

READ MORE – தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.!

குறிப்பு:

இந்த பணியானது தற்காலிகமானது என்றும், எப்போ வேண்டுமெனாலும் மாற்றுவதற்கான உரிமையை அந்த நிர்வாகம் கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்