தமிழக அரசில் ‘அப்ரென்டிஸ்’ பணி.. மொத்தம் 79 காலியிடம்! உடனே விண்ணப்பியுங்கள்…
TNMVND ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை, (TNMVMD) சென்னை அப்ரண்டிஸ் (பட்டதாரி மற்றும் டிப்ளமோ) காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வழங்கியுள்ளது.
காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளை உடையவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 18, டெக்னீசியன் 61 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன.
2020 முதல் 2023 வரை பி.இ., பி.டெக்., படித்தவர்கள் 15.07.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு boat-srp.com என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
காலியிடங்கள் விவரம்
காலியிடம்
|
எண்ணிக்கை |
பட்டதாரி அப்ரண்டிஸ் | 18 |
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் | 61 |
மொத்தம் காலியிடங்கள் எண்ணிக்கை | 79 |
கல்வித்தகுதி
- பட்டதாரி அப்ரண்டிஸ் : சம்பந்தப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- டெக்னீசியன் அப்ரண்டிஸ் :சம்பந்தப்பட்ட துறைகளில் மாநில அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது
பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
சம்பள விவரம்
- இயந்திர பொறியியல் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் (பட்டதாரி அப்ரண்டிஸ்) பயிற்சியாளர்களுக்கு ரூ.9000 சம்பளமாக வழங்கப்படும்.
- இயந்திர பொறியியல் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் (டெக்னீசியன் அப்ரண்டிஸ்) பயிற்சியாளர்களுக்கு ரூ.8000 சம்பளமாக வழங்கப்படும்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி | 24-06-2024 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 15-07-2024 |
ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட பட்டியலின் அறிவிப்பு தேதி | 19-07-2024 |
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி | 29-07-2024 முதல் 30-07-2024 வரை |
விண்ணப்பிக்கும் முறை
- முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான boat-srp.com செல்ல வேண்டும்.
- இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக படித்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.
- மாணவர் உள்நுழைவை தேர்ந்தெடுக்கவும்
- பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் புதிய கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனிப்பட்ட பதிவு எண் (12 இலக்கம்) உருவாக்கப்படும்.
- வழிமுறைகளை கவனமாக படித்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
- மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.