TNPSCயின் அசத்தல் அறிவிப்பு.. பல்வேறு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள்.!

Published by
மணிகண்டன்

சென்னை : தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பை TNPSC அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இன்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப பணிகளுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு என வரையறுக்கப்பட்ட இந்த தேர்வானது மொத்தம் 20 பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2024 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் நாள் :

பொதுத்தமிழ், பொது அறிவு, திறனறிவு, நுண்ணறிவு ஆகியவை அடங்கிய முதல் தாள் தேர்வு நடைபெறும் நாள் – 28.07.2024.

பொறியியல், வேளாண்மை, புள்ளியில், உடற்கல்வி முதல் குழந்தை வளர்ச்சி , உளவியல் உட்பட மொத்தம் 21 பாட பிரிவுகளுக்கான தேர்வு – 12.08.2024 முதல் 16.08.2024 வரை.

காலிப்பணியிடங்கள் :

சட்ட கல்லூரி பணிகள், உடற்கல்வி பணிகள், போக்குவரத்து கழக பணிகள் என மொத்தம் 20 வெவ்வேறு பணிகளுக்கு 118 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.06.2024.

விண்ணப்பம் திருத்தம் – 19.06.2024 முதல் 21.06.2024.

விண்ணப்பிக்கும் முறை :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்

அதில், இன்று (15.05.2024) முதல் தேதியிடப்பட்ட தொழில்நுட்ப பணிகளுக்கான வேலைவாய்ப்பு (நேர்முக தேர்வு) லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் வரும் பக்கத்தில் அறிவிப்பாணையை (Notification) முழுதாக படிக்க வேண்டும். அதில் தங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கான கல்வி தகுதி, பதவி விண்ணப்ப குறியீடு எண் ஆகியவற்றை பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதற்குரிய லிங்க்கில் கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான அழைப்பு வரும் எனவும், எழுத்து தேர்வு முடிந்த பிறகு தகுதி வாய்ந்த நபர்களுக்கு நேர்காணல் மூலம் பணியாணை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

GOAT படம் பார்த்துவிட்டு வருண் சக்கரவர்த்தி என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

சென்னை : விஜயின் கோட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தினை பார்த்த மக்களை பலரும் படம் மிகவும்…

22 mins ago

கொல்கத்தா மருத்துவர் படுகொலை ! காவல்துறை பணம் கொடுக்க முயன்றதாக பெற்றோர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா : பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவம் நாளுக்கு நாள்…

29 mins ago

நல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் இவ்வளவு நன்மைகளா?..

சென்னை -ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள், யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி மருத்துவர்கள் கூறும் தகவல்களை இப்பதிவில் அறியலாம்..…

1 hour ago

ஆந்திரா : பாலியல் புகாரில் சிக்கிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ.! தீயாய் பரவிய வீடியோவால் பரபரப்பு.!

ஆந்திரப் பிரதேசம் : ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சத்யவேடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் கோனேட்டி ஆதிமூலம்…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல் ..ரோகினி மறைக்கும் விஷயத்தை கணிக்கும் மனோஜ் .!

சென்னை -சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான  எபிசோடில்[செப்டம்பர் 5] ஒரு மாலையை வைத்து மனோஜின் மனதை  மாற்றி விடுகிறார் ரோகினி..…

2 hours ago

GOAT படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கேப்டன் விஜயகாந்த்! உருகும் ரசிகர்கள்…

சென்னை : GOAT படத்தில் நிறைய சர்ப்ரைஸ் விஷயங்கள் வைத்து இருப்பதாக படக்குழு கூறி படத்தின் மீதிருந்த, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி…

2 hours ago