தமிழக முதல்வர் அலுவலக வேலை.. 25 இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்கள்.!

Published by
கெளதம்

TNCMFP ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்கு (2024-26) தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதன்படி, 25 இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை சரியாக படித்துக்கொண்டு இந்த பணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tn.gov.in/tncmfp/என்கிற இணையத்தில் விண்ணக்கவும்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பம் தொடங்கிய தேதி 06.08.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 26.08.2024
முதற்கட்ட மதிப்பீட்டுத் தேர்வுக்கான இ-டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யும் நாள் 05.09.2024
முதற்கட்ட தேர்வு நாள் 15.09.2024
விரிவான தேர்வு நாள் செப்டம்பர் 2024 கடைசி வாரம்
நேர்காணல் தேர்வு நாள் அக்டோபர் 2024 கடைசி வாரம்
புத்தாய்வு திட்டம் துவக்கம் நவம்பர் 2024

காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :

  • இளம் தொழில் வல்லுநர்கள் – 25

துறைகள்:-

  1. நீர்வளங்களை மேம்படுத்துதல்
  2. வேளாண் உற்பத்தி, விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துவதற்குரிய இணைப்புகளை உருவாக்குதல்.
  3. ஊரக மற்றும் நகர்ப்புர குடியிருப்புக்கள்
  4. கல்வித் தரத்தை உயர்த்துதல்
  5. சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்துதல்
  6. அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகம் (Social Inclusion)
  7. உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி
  8. திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு
  9. முறையான கடன்
  10. இளைஞர் நலன்
  11. சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பருவநிலை மாற்றம்
  12. தரவு நிர்வாகம்

கல்வித் தகுதி:

  • (பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை அறிவியல்) அல்லது கலை /அறிவியலில் முதுகலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • பணி அனுபவம் கூடுதல் அனுகூலமாக கருதப்படும்.
  • ஆராய்ச்சி அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • தமிழ்மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரரின் வயது 26.08.2024 ன்படி, 22-30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 33 ஆகவும் இருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2022-24ல் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 30 புத்தாய்வு வல்லுநர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை.

சம்பளம் :

இப்புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் வல்லுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.65,000 மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்ற செலவினத்திற்காக மாதம் ரூ.10,000 கூடுதல் தொகையாக வழங்கப்படும். இவற்றைத் தவிர கூடுதல் நிதி உதவி எதுவும் வழங்கப்படமாட்டாது.

தேர்வு செயல்முறை:

  1. பூர்வாங்க மதிப்பீடு (கணினி அடிப்படையிலான சோதனை)
  2. விரிவான தேர்வு (எழுத்துத் தேர்வு)
  3. தனிப்பட்ட நேர்காணல்

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  1. இணையவழி விண்ணப்பங்களை https://www.tn.gov.in/tncmfp அல்லது www.bim.edu/tncmfp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  2. இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 26.08.2024 ஆகும்.
  3. இதற்கான விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.
  4. இணையவழி வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
விண்ணப்ப படிவம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
Published by
கெளதம்

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

2 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

2 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

3 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

4 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

4 hours ago