12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தகுதியான வேலைகளுக்கு சம்பளமாக ரூ. 29,200 – ரூ. 92,300 ஆக வழங்கப்படுகிறது உடனே விண்ணப்பியுங்கள்.
SSC CHSL 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது, இப்பொது பல பதவிகளுக்கான விண்ணப்பங்களின் அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.
அதன்படி, SSC CHSL 2023-க்கான பதிவுகளுக்கான விண்ணப்பம் மே 9 ஆம் தேதி தொடங்கியது, இதில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் SSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஜூன் 8 வரை கொடுக்கப்பட்டுள்ளது, இதில் சுமார் 1600 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதி :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
கீழ் பிரதேச எழுத்தர்/ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆனால், பெண் வேட்பாளர்கள், பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள நபர்கள் (PwBD), மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
வேலை மற்றும் சம்பளம்:
லோயர் டிவிஷன் கிளர்க் (எல்டிசி) ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டென்ட் (ஜேஎஸ்ஏ) ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படுகிறது. மேலும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிகளுக்கு சம்பளமாக ரூ.25,500 – ரூ.81,100 மற்றும் ரூ.29,200 – ரூ.92,300 ஆக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள pdf-ல் தெரிந்து கொள்ளலாம்.
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_09052023.pdf
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…