SSC 2024: பணியாளர் தேர்வு ஆணையம் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு.!
SSC 2024: பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல்) ஆட்சேர்ப்புக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் JE பதவிக்கு மொத்தம் 968 காலியிடங்கள் உள்ளன.
காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு SSC-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssc.gov.in இணையளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 28ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 18-04-2024 அன்றுடன் நிறைவடைகிறது. SSC JE 2024 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பார்க்க வேண்டும்.
பணியின் விவரங்கள்
- எல்லை சாலைகள் அமைப்பு – 438
- ஜூனியர் இன்ஜினியர் (பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன்) – 37
- ஜூனியர் பொறியாளர் (பிரம்மபுத்திரா வாரியம், ஜல் சக்தி அமைச்சகம்) – 2
- ஜூனியர் பொறியாளர் (மத்திய நீர் ஆணையம்) – 12
- ஜூனியர் பொறியாளர் (மத்திய நீர் ஆணையம்) – 120
- ஜூனியர் பொறியாளர் (மத்திய பொதுப்பணித் துறை) – 121
- ஜூனியர் பொறியாளர் (மத்திய பொதுப்பணித் துறை) – 217
- ஜூனியர் பொறியாளர் ( மத்திய நீர் சக்தி ஆராய்ச்சி நிலையம்) – 2
- ஜூனியர் பொறியாளர் (மத்திய நீர் சக்தி ஆராய்ச்சி நிலையம்) – 3
- ஜூனியர் பொறியாளர் (பாதுகாப்பு அமைச்சகம்) – 3
- ஜூனியர் பொறியாளர் (பாதுகாப்பு அமைச்சகம்) – 3
- ஜூனியர் பொறியாளர் (ஃபராக்கா அணைக்கட்டு திட்டம், ஜல் சக்தி அமைச்சகம்) – 2
- ஜூனியர் பொறியாளர் (ஃபராக்கா அணைக்கட்டு திட்டம், ஜல் சக்தி அமைச்சகம்) – 2
- ஜூனியர் பொறியாளர் ( தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்) – 6
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ரூ.100
பெண்கள், SC, ST மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண முறை:
ஆலன் பேமெண்ட்
தகுதி
இளங்கலை பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பட்டப்படிப்பை முடிதிருக்க வேண்டும்.
வயது
வயது 18 மேலாகவும் 30 அல்லது 32 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில், JE அல்லது ஜூனியர் இன்ஜினியர் தொடர்பான விருப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
- இதனையடுத்து விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் தேவையான விவரங்களை நிரப்பவும்.
- பின்னர், புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் ஆவணங்களைப் பதிவேற்றவும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.