B.Sc முடித்திருந்தால் சமூக சுகாதார அதிகாரி வேலை…ரூ.40,000 வரை சம்பளம்.!

Published by
கெளதம்

State Health Society: தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையத்தில் சமூக சுகாதார அலுவலர் (CHO) பணிக்கான அறிவிப்பை பிகார் மாநில சுகாதார சங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு SHS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான State Health Society என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி வருகின்ற 1ம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு 30-04-2024 அன்று மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பணியின் விவரம்

சமூக சுகாதார அலுவலர் (CHO) – 4500

தகுதி

B.Sc நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

வயது

குறைந்தபட்ச வயது 21 ஆகவும் அதிகபட்ச வயது 42 ஆகவும் இருக்க வேண்டும். BC, EBC பிரிவினருக்கு அதிகபட்ச வயது 45 ஆகவும் SC, ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 47 ஆக விதிகளின்படி தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்

ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 எனவும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SC, ST பீகார் குடியுரிமை கொண்ட ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு ரூ.250 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டண முறை

ஆன்லைன் பேமெண்ட்

சம்பளம்

மாதம் ரூ.32,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணச் சரிபார்ப்பின் போது, இந்திய நர்சிங் கவுன்சிலில் எந்த மாநில நர்சிங் கவுன்சில் என்கிற நிரந்தரப் பதிவை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இறுதித் தேர்வு வைக்கப்பட்டு தகுதி மற்றும் வகை வாரியான காலியிடத்தை நிரப்பப்படும்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

8 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

8 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

10 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

10 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

13 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

13 hours ago