முந்துங்கள்! SEBI-யில் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்!

SEBI

SEBI: இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), அதிகாரி கிரேடு A (உதவி மேலாளர்) காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செபி என்பது இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.

Read More – டிகிரி முடித்திருந்தால் கூட்டுறவு வங்கியில் வேலை.! உடேன விண்ணப்பியுங்கள்…

அதாவது, பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்கு நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பில் தான் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செபியில் காலியாக உள்ள Grade Aவில் (உதவி மேலாளர்) 97 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Read More – UPSC ஆட்சேர்ப்பு 2024: 28 பொருளாதார அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்.!

எனவே, இந்த வேலைவாய்ப்புக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப தேதி அடுத்த மாதம் 13ம் தேதி தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரம்: Officer Grade A (Assistant Manager)

பொதுவான பணிகள் 62, சட்ட ரீதியிலான பணிகள் 5, தகவல் தொழில்நுட்பம் 24, பொறியியல் (மின்சாரம்) 2, ஆராய்ச்சி 2, உத்தியோகபூர்வ மொழி 2 என மொத்தம் 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி:

பிஜியில் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் ஏப்ரல் 01, 1994 அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். இருப்பினும், விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் மற்ற கட்டணங்களை சேர்த்து ரூ. 1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள SEBI-Notification-Officer-Grade-A-Assistant-ManagerPosts என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்