SCCL ஆட்சேர்ப்பு: மொத்தம் 272 காலியிடம்…டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை.!
SCCL: சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) மூலம் எக்சிகியூட்டிவ் மற்றும் நான் எக்சிகியூட்டிவ் கேடரின் கீழ், டிஎம்ஓ மற்றும் ஜூனியர் ஃபாரெஸ்ட் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் மொத்தம் 272 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், தேவையான ஆவணங்கள் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதை உறுதிசெய்து, முன்கூட்டியே விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
READ MORE – 10 முடித்தால் போதும்…ரயில் சக்கர தொழிற்சாலையில் பயிற்சியுடன் வேலை.!
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. அதன்படி,விண்ணப்பதாரர்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://scclmines.com/scclnew/index.asp#x என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கானதொடக்கத் தேதி 01-03-2024 அன்று தொடங்கியது. அதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் 18-03-2024 அன்று மாலை 5:00 மணி வரை என தெரிவிக்கப்ட்டுள்ளது.
சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் என்பது இந்தியாவில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்க நிறுவனம் ஆகும். இது தெலுங்கானா அரசின் எரிசக்தி துறையின் உரிமையின் கீழ் இயங்குகிறது.
READ MORE – இன்னும் மூன்றே நாட்கள் தான்…இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்!
சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் அறிவிப்பின்படி, எக்சிகியூட்டிவ் மற்றும் நான் எக்சிகியூட்டிவ் கீழ் உள்ள பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 272 காலியிடங்கள் உள்ளது அதனை பின்வருமாறு பார்க்கலாம்.
பணியின் விபரம்
- மேலாண்மை பயிற்சியாளர் (Mining) – 139
- மேலாண்மை பயிற்சியாளர் (F&A) – 22
- மேலாண்மை பயிற்சியாளர் (Personnel) – 22
- மேலாண்மை பயிற்சியாளர் (IE) – 10
- ஜூனியர் எஸ்டேட் அதிகாரி – 10
- மேலாண்மை பயிற்சியாளர் (Hydro-Geologist) – 2
- மேலாண்மை பயிற்சியாளர்(Civil) -18
- இளைய வன அதிகாரி – 3
- பொது கடமை மருத்துவ அதிகாரி – 30
- துணைக் கண்காணிப்பாளர்ப யிற்சியாளர் (Civil)- 16
சம்பளம்
அந்தந்த பணிக்கான சம்பளம் விவரம் கொடுக்கடவில்லை.
கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணமாக 100 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக 900 ரூபாயும் பெறப்படுகிறது.
வயது வரம்பு
வயது 21 வயதுக்கு குறைவாகவும் 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. GDMOs பதவிக்கு, அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி
- B.E/B.Tech/B.Sc.(Engg.)
- CA/ ICWA or CMA
- MBA with specialization in HR
- BE/B.Tech அல்லது பொறியியலில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டதாரி
- B.E/B.Tech (Civil)
- M.Sc. or M.Sc.
- B.E/B.Tech (சிவில்)
- B.Sc.(Agriculture) or B.Sc.(Forestry)
- B.Sc (Hons)(AGR) M.Sc.(AGR)
- எம்.பி.பி.எஸ் (MBBS)
- டிப்ளமோ (சிவில் இன்ஜி.)
மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிக்கான அடிப்படையில் இந்த கல்வி தகுதி பொருந்தும்.