மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்..! வருவாய் துறையில் வேலை…உடனே விண்ணப்பிங்க..!

நிதி அமைச்சகம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தின் (Ministry of Finance) கீழ் உள்ள வருவாய் துறையில் (Department of Revenue) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருவாய் துறையில் பணி புரிவதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து விட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் மற்றும் வயது:

வருவாய் துறையில் காலியாக உள்ள திறமையான நிர்வாக அதிகாரி (Competent Authority & Administrator) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரரின் வயது குறித்த தகவல் அறிவிப்பில் தரப்படவில்லை.

விண்ணப்பதாரரின் தகுதி:

  • SAFEMA- இந்திய அரசாங்கத்திற்கு JS பதவிக்குக் குறையாத மத்திய அரசின் அதிகாரிகள்.
  • NDPSA-  சுங்க ஆணையர் அல்லது மத்திய கலால் ஆணையர் அல்லது வருமான வரி ஆணையர் அல்லது அதற்கு இணையான பதவியில் உள்ள மத்திய அரசின் அதிகாரி.
Ministry of Finance Recruitment 2023
Ministry of Finance Recruitment 2023 [Image Source : Ministry of Finance]

பதவிக்காலம் :

மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

எப்படி விண்ணப்பிப்பது.?

  • மேற்கண்ட பணிக்குஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து Application Form விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
  • அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போல உரிய ஆவணங்களுடன் முறையாகப் தவறில்லாமல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை எண்.51-II, வருவாய்த் துறை, நிதி அமைச்சகம், நார்த் பிளாக், புது தில்லி-110001 என்ற முகவரிக்கோ அல்லது gaurav.mehra85@nic.in அல்லது kishan.kumar88@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
  • எந்த ஆன்லைன் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

தேர்வு முறை:

வருவாய் துறையில் பணியாற்றுவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களை அறிய https://dor.gov.in/vacancies-circulars அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

சம்பளம் மற்றும் கடைசி தேதி:

வருவாய் துறையில் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,44,200 லட்சம் முதல் ரூ.2,18,200 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் Application Form விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜூன் 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Gnanasekaran Anna University
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)