வருவாய் துறையில் பதிவாளர் வேலை..! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!
நிதி அமைச்சகத்தின் (Ministry of Finance) கீழ் உள்ள வருவாய் துறையில் (Department of Revenue) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வருவாய் துறையில் பணி புரிவதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து விட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதவியின் விவரம்:
வருவாய் துறை, புதுடெல்லியின் கீழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பதிவாளர் (Registrar) பதவியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்தவிட்டு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
பதிவாளர் (குரூப் ‘ஏ’ வர்த்தமானி) பதவிக்கு விண்ணப்பிப்பவர் வயது குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. மேலும் விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதி:
நிர்வாகம், ஸ்தாபனம் மற்றும் கணக்கு விஷயங்களில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். (LLB)
விண்ணப்பிக்கும் முறை:
- பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் முதலில் வருவாய் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு dor.gov.in செல்லவேண்டும்.
- அங்கு கொடுக்கப்பட்டுள்ள Notification அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு, அறிவிப்பில் இருக்கும் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
- பின், விண்ணப்பத்தை செயலாளர் (Ad. 1C), நிதி அமைச்சகம், வருவாய்த் துறை, அறை எண். 51-II, நார்த் பிளாக், புதுடெல்லி-110001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
- தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் மட்டுமே தேர்வுக்கு அனுப்பப்படலாம்.
- பரிந்துரைக்கப்பட்ட தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் எந்த வகையிலும் பரிசீலிக்கப்படாது.
தேர்வு முறை மற்றும் சம்பள விவரம்:
பதிவாளர் பதவிக்கான தேர்வு நேர்காணல் முறைப்படி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி தேதி:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். அதாவது கடைசி தேதி ஆகஸ்ட் 4ம் தேதி ஆகும். அதனை தாண்டி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.