பட்டதாரிகளுக்கு முன்னுரிமை..! ‘SBI’ வங்கியில் வேலைவாய்ப்பு…சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

SBI Recruitment 2023

பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இந்திய அரசால் நடத்தப்படும் இவ்வங்கியில் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் நடைபெறும். எஸ்பிஐ அவ்வப்போது காலியாக உள்ள பணிஇடங்களி நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடும்.

அந்தவகையில் தற்பொழுது, எஸ்பிஐ  ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளின் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களின் ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, வாங்கி வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் மற்றும் பதவி: 

எஸ்பிஐ வங்கியில் துணைத் தலைவர் ( Vice President – 1), மூத்த சிறப்பு நிர்வாக-திட்ட மேலாளர் (Senior Special Executive-Program Manager – 4), மூத்த சிறப்பு நிர்வாகி-தரம் மற்றும் பயிற்சி (Senior Special Executive-Quality & Training – 1), மூத்த சிறப்பு நிர்வாகி-கட்டளை மையம் (Senior Special Executive-Command Centre – 3) என மொத்தமாக 9 பணியிடங்கள் உள்ளன.

SBI Recruitment
SBI Recruitment [Image source: SBI]

தகுதி: 

  • துணைத் தலைவர் மற்றும் மூத்த சிறப்பு நிர்வாக-திட்ட மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐடி அல்லது மேனேஜ்மென்ட் துறையில் பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • மூத்த சிறப்பு நிர்வாகி-தரம் மற்றும் பயிற்சி பதவிக்கு விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை துறையில் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • மூத்த சிறப்பு நிர்வாக-கட்டளை மையம் பதவிக்கு விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான தகுதியைப் பார்க்க விண்ணப்பதாரர்கள் Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்க வேண்டும்.

வயது: 

மேலே உள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவரின் வயது 35 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு எஸ்பிஐ வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை பார்க்கவும்.

அனுபவம் மற்றும் வேலை காலம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க, அந்தந்த துறைகளில் 5 முதல் 7 வருடம் அனுபவம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் ஆரம்பத்தில் 3 ஆண்டுகள் பணியமர்த்தப்படுவார். வங்கியின் விருப்பப்படி பணிக்காலம் மேலும் 1 வருடத்திற்கு நீட்டிக்கப்படலாம்.

தேர்வு முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்:

இந்த பணிக்கு நேர்காணல் முறைப்படி விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொது, OBC மற்றும் EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். SC, ST மற்றும் PwBD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி:

  • மேற்கண்ட பணிகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐயின் https://bank.sbi/web/careers அதிகாரப்பூர்வ இணையதளதை அணுகவும்.
  • அங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்படிவத்தில் அணைத்து விவரங்களையும் தவறில்லாமல் நிரப்ப வேண்டும்.
  • பின், அடையாளச் சான்று, கல்வித் தகுதி, சமீபத்திய புகைப்படம், ரெஸ்யூம் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும்.

சம்பள விவரம்:

  • துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ஓராண்டுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வழங்கப்படும்.
  • மூத்த சிறப்பு நிர்வாக-திட்ட மேலாளர், மூத்த சிறப்பு நிர்வாகி-தரம் மற்றும் பயிற்சி மற்றும் மூத்த சிறப்பு நிர்வாகி-கட்டளை மையம் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ஓராண்டுக்கு ரூ.22 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI Recruitment
SBI Recruitment [Image source: SBI]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi