PNB அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு ..! இந்தியா முழுவதும் 2700 காலியிடங்கள்..!

PNB Bank Job

பஞ்சாப் நேஷனல் வங்கி  (PNB) :  இந்தியா முழுவதும் உள்ள 2700 காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை அப்ரண்டிஸ்சாக பணியாற்ற பணியமர்த்த உள்ளனர். இதற்கான தேர்வு விவரங்கள், தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை ஆகியவற்றை பார்க்கலாம்.

கல்வி தகுதி :

பஞ்சாப் நேஷனல் வங்கியில் அப்ரண்டிஸ்ஸாக பணிபுரிய, விண்ணப்பதாரர்கள் அனைவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், விண்ணப்பதாரர்களின் 20 – 28 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

தேர்வு விவரங்கள் :

விண்ணப்பத்துள்ள அனைவருக்கும் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள ஆன்லைன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்படி விண்ணப்பதாரர்களுக்கு பொது மற்றும் நிதி விழிப்புணர்வு, பொது ஆங்கிலம், பகுத்தறிவு திறன் மற்றும் கணினி சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 25 மதிப்பெண்களுக்கு 25 கேள்விகள் இருக்கும். இதுவே தேர்வு முறையாகும்.

மேலும், இதில் இருந்து தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி நடைபெறும் போது அடுத்த கட்டமாக எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடத்தி தேர்ந்தெடுப்பார்கள்.

சம்பள விவரங்கள் :

ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தில் பணியில் ஈடுபட்டு வரும் பயிற்சியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு உதவித் தொகையாக கீழ் கண்ட தொகை வழங்கப்படும்.

  • கிராமப்புறம்/அரை நகர்ப்புறம் – ரூ. 10,000 /
  • நகர்ப்புறம் – ரூ. 12,000 /-
  • மெட்ரோ – ரூ. 15,000 /-

விண்ணப்பக் கட்டணம்:

  • குறைபாடு உள்ள நபர்கள் (Persons with Benchmark Disabilities )- ரூ. 400 ஆகவும் GST 18% சேர்த்து ரூ.472 கட்டணமாக கட்ட வேண்டி இருக்கும்.
  • பெண்கள்/ SC/ ST நபர்கள் – ரூ. 600 ஆகவும் GST 18% சேர்த்து மொத்தம் ரூ.708 கட்டணமாக கட்ட வேண்டும்.
  • GEN/OBC நபர்கள் – ரூ. 800 ஆகவும் GST 18% சேர்த்து மொத்தம் ரூ.944 ஆகவும் கட்டணமாக கட்ட வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது ?

  • பஞ்சாபி நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தலமான https://www.pnbindia.in/Recruitments.aspx செல்லவேண்டும்.
  • அதில் ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். இது உங்களை புதிய இணையதளத்திற்கு கொண்டு செல்லும்.
  • அதில் காணப்படும் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சரியாகவும், மிக கவனமாகவும் நிரப்ப வேண்டும்.
  • அதில் கேட்கும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • குறிப்பிட்ட விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  • பின் விண்ணப்பதித்த அந்த படிவத்தை ஒரு நகல் எடுத்துவைத்து கொள்ள வேண்டும். சில இக்காட்டான நேரங்களில் அது தேவைப்படலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்