உதவியாளருடன் இணைந்த Data Entry ஆட்சேர்ப்பு : கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்தை நிரப்ப தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் நாளை (ஜூலை 9) மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் சில மணி நேரங்களே உள்ளதால், கோவையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் தகுதியுடைய நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி | 26.06.2024 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 09.07.2024 |
காலியிடங்கள் விவரம் :
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (குறிப்பு எத்தனை காலியிடங்கள் என குறிப்பிடப்படவில்லை)
சம்பளம்
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவருக்கு சம்பளமாக ரூ.13,240/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை தகுதி
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641018 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
குறிப்பு : மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…