12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோயம்புத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.!

Job - Vacancy

உதவியாளருடன் இணைந்த Data Entry ஆட்சேர்ப்பு : கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்தை நிரப்ப தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் நாளை (ஜூலை 9) மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் சில மணி நேரங்களே உள்ளதால், கோவையில் வேலை தேடிக்கொண்டிருக்கும்  தகுதியுடைய நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி 26.06.2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.07.2024

காலியிடங்கள் விவரம் :

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (குறிப்பு எத்தனை காலியிடங்கள் என குறிப்பிடப்படவில்லை)

சம்பளம் 

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவருக்கு சம்பளமாக ரூ.13,240/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அடிப்படை தகுதி

  • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior Level) முடித்திருக்க வேண்டும்.
  • கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641018 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

குறிப்பு : மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest