கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி. டிஎன்பிஎஸ்சி அரசு பணி குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணிக்கான தேர்வு, அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி அன்று நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. டிசம்பர் 17ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விபரங்கள். குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 17(1)ன்படி மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் www.tn.gov.in/department/30(Social Welfare and Women Empower Department) шmb […]