பி.எஸ்சி டிகிரி முடித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு ..! RMLIMS-ல் 106 காலிப்பணியிடங்கள் ..!

RMLIMS : டாக்டர் ராம் மனோகர் லோஹியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (RMLIMS), லக்னோவில் ஆசிரியர் அல்லாத (குரூப் பி & சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, உணவியல் நிபுணர், கண் மருத்துவ நிபுணர் தரம் -I, தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தொழில்நுட்பவியலாளர் (Technologist) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.

இந்த இன்ஸ்டிடியூட்டில் மொத்தமாக 106  காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து அனைவரும் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்

UR/ OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1180 (விண்ணப்பக் கட்டணம் – ரூ. 1000 மற்றும் ஜிஎஸ்டி – ரூ.180) எனவும், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணமாக ரூ. 708 (விண்ணப்பக் கட்டணம்-ரூ. 600 மற்றும் ஜிஎஸ்டி – ரூ.108). PWD விண்ணப்பதாரர்களுக்கு எந்த கட்டணமும் இல்லை எனவும் அறிவித்துள்ளனர்.

கட்டண முறை

ஆன்லைன் பேமெண்ட்

வயது வரம்பு

31-03-2024 தேதியின்படி, அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதாகவும், அதிகபட்ச வயது வரம்பு 40 வயதாகவும் இருக்க வேண்டும். மேலும், விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

பணியின் விவரங்கள்

  • தொழில்நுட்ப அதிகாரி – 6 காலியிடங்கள் – பி.எஸ்சி (B.Sc) பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி
  • உணவியல் நிபுணர் – 5 காலியிடங்கள் – எம்.எஸ்சி (M.Sc) உணவு & ஊட்டச்சத்து (Food & Nutrition)
  • கண் மருத்துவ நிபுணர் (தரம் 1) – 2 காலியிடங்கள் – பி.எஸ்சி (B.Sc) கண் மருத்துவ நுட்பங்கள் (Ophthalmic Techniques)
  • தொழில்நுட்ப உதவியாளர் (ENT) – 2 காலியிடங்கள் – B.Sc/ B.Sc (Hons) – பி.எஸ்சி / பி.எஸ்சி (பேச்சு &கேட்டல்)
  • டெக்னீஷியன் (கதிரியக்கவியல்) – 15 காலியிடங்கள் – 10 /12 வகுப்பு(அறிவியல் பாடம்)/டிப்ளமோ (ரேடியோகிராஃபி டெக்னிக்ஸ்)/பி.எஸ்சி (ஹான்ஸ்) (ரேடியோகிராபி)
  • டெக்னீஷியன் (ரேடியோதெரபி) – 05 காலியிடங்கள் – 10 /12 வகுப்பு (அறிவியல் பாடம்)/டிப்ளமோ (ரேடியோதெரபி டெக்னிக்ஸ்)/பி.எஸ்சி (ஹான்ஸ்) (ரேடியோதெரபி)
  • ஜூனியர் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் – 3 காலியிடங்கள் – இன்டர் (அறிவியல் பாடம்)/பிஜி (எம்ஓடி)
  • ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் – 5 காலியிடங்கள் – இன்டர் (அறிவியல் பாடம்)/PG (MPT)
  • தொழில்நுட்ப அதிகாரி (உயிர் மருத்துவம்) – 3 காலியிடங்கள் – டிப்ளமோ/பட்டம் (சம்பந்தப்பட்ட பொறியியல்)
  • மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் –  60 காலிப்பணிகள் – பட்டம் (MLT/மருத்துவ ஆய்வகம் அறிவியல்)

குறிப்பு

விண்ணப்பதாரரின் அனைத்து விவரங்களும் இறுதியாக சமர்ப்பித்த பிறகு எந்த மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்