TNERC-யில் அலுவலக உதவியாளர் வேலை ..! 8-ம் வகுப்பு படிச்சிருந்தா விண்ணப்பிக்கலாம் ..!

TNERC Recruitment

TNERC ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு 05 காலியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிட்டு வேலைவாப்பு குறித்த அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்து இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை
அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் 1
அலுவலக உதவியாளர் 4
மொத்தம் 5

தேவையான கல்வி தகுதி 

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் தமிழ் ஒரு மொழி/பாடமாக 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பதவிக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • நல்ல உடலமைப்பு மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு? 

பதவியின் பெயர் சம்பளம்
அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
அலுவலக உதவியாளர் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

வயது எல்லை

  • மேற்கண்ட பணியில் வேலைக்கு சேர அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள்.
    வயது வரம்பு மற்றும் வயது தளர்வுக்கான விவரங்கள் வேண்டும் என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ  அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  • மேற்கண்ட பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • பின் அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை க்ளிக் செய்யுங்கள்.
  • அதற்கு பிறகு உங்களுக்கு இந்த வேலை தொடர்பான விண்ணப்ப படிவம் வரும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான உங்கள் ஆவணங்களை வைத்து நிரப்பி கொள்ளுங்கள்.
  • நிரப்பிய பிறகு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி

Tamil Nadu Electricity Regulatory Commission, 4th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka. Industrial Estate, Guindy, Chennai 600032

தேர்வு செய்யப்படும் முறை? 

  • இந்த பணியில் சேர விரும்பி விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு நேர்காணல் மூலம் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமான நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 05/07/2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 31/07/2024

முக்கியமான விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
விண்ணப்ப படிவம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்