ஒரு வருட ITI முடித்திருந்தால் போதும்.. கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சி.!

NCPIL

திருநெல்வேலி, கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் சம்பளத்துடன் ஒருவருட அப்ரன்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய மையத்தில் (NPCIL) அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 02-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :

  • ஃபிட்டர் – 56 காலிப்பணியிடங்கள்.
  • மெஷினிஸ்ட் – 25 காலிப்பணியிடங்கள்.
  • வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) – 10 காலிப்பணியிடங்கள்.
  • எலக்ட்ரீசியன் – 40 காலிப்பணியிடங்கள்.
  • எலக்ட்ரானிக் மெக்கானிக் – 20 காலிப்பணியிடங்கள்.
  • பம்ப் ஆபரேட்டர் மற்றும் மெக்கானிக் – 07 காலிப்பணியிடங்கள்.
  • இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் – 20 காலிப்பணியிடங்கள்.
  • மெக்கானிக் குளிர்பதனம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (AC) – 05 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி :

  • சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒருவருட ITI எனப்படும் தொழிற்பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • ரூ.7,700/- (ஒரு வருட ITI)
  • ரூ.8.,855/- (இரண்டு வருட ITI)

வயது வரம்பு : 

  • குறைந்தபட்சம் 14 வயது முதல் 24 வயது வரை.
  • அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பம் தொடங்கிய தேதி – 02 ஜூன் 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் – குறிப்பிடப்படவில்லை .

விண்ணப்பிக்கும் முறை : 

  • அரசு அப்ரன்டீஸ் பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வ தளமான www.apprenticeshipindia.gov.in/க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் NPCIL அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, அதற்கான நகலை சேர்த்து இறுதி தேதிக்குள் வந்து சேரும்படி தபால் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையதிற்கு அனுப்ப வேண்டும்.
  • அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.
  • அணுமின் நிலையத்திற்கு அருகில் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும்

அனுப்ப வேண்டிய முகவரி : 

கூடங்குளம் அணுமின் திட்டம்,
கூடங்குளம் அஞ்சல், ராதாபுரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம் – 627106, தமிழ்நாடு .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Manipur riot - Live
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat