வேலைவாய்ப்பு

தமிழக மருத்துவத்துறையில் நிரந்தர பணி.! 10, +2 முடித்திருந்தால் போதும்… விவரம் இதோ…

Published by
மணிகண்டன்

தமிழக மருத்துவத்துறையில் லேப் டெக்னீசியன் மற்றும் தொழிற்சார் மருத்துவ சிகிச்சை வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழக அரசின் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் மருத்துவ துறை ஆட்சேர்ப்பு தளமான TNMRB (Tamil Nadu Medical Services Recruitment Board) கீழ் லேப் டெக்னீசியன் மற்றும் தொழில்முறை சிகிச்சை வல்லுநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஒருவருட லேப் டெக்னீசியன் படிப்பு அல்லது இளங்கலை தொழில்முறை சிகிச்சை படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

இதற்கு கடந்த 12 ஜூன் 2023 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக 02 ஜூலை, 2023 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் 25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலிப்பணிகள் :

  • லேப் டெக்னீசியன் – கிரேடு III.
  • தொழில்முறை சிகிச்சை வல்லுநர்கள் (Occupational Therapist).

காலியிடங்கள் :

  • லேப் டெக்னீசியன் – கிரேடு III -332.
  • தொழில்முறை சிகிச்சை வல்லுநர்கள் (Occupational Therapist) – 08.

கல்வித்தகுதி :

லேப் டெக்னீசியன் – கிரேடு III :

  • 10, +2 முடித்து ஒருவருட லேப் டெக்னீசியன் படிப்பை முடித்து இருக்க வேண்டும்.

தொழில்முறை சிகிச்சை வல்லுநர்கள் (Occupational Therapist) : 

  • இளங்கலை தொழில்முறை சிகிச்சை (Bachelor Degree in Occupational Therapy) பட்டப்படிப்பை முடித்து இருக்க வேண்டும்

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • லேப் டெக்னீசியன் – கிரேடு III – ரூ.13,000/-
  • தொழில்முறை சிகிச்சை வல்லுநர்கள் (Occupational Therapist) – ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/-

வயது வரம்பு (அதிகபட்சம்): 

லேப் டெக்னீசியன் – கிரேடு III :

  • குறைந்த பட்சம் 18 – அதிகபட்சம் 32 (குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)

தொழில்முறை சிகிச்சை வல்லுநர்கள் (Occupational Therapist) :

  • குறைந்த பட்சம் 25- அதிகபட்சம் 37 (குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்).

தேர்வு செய்யப்படும் முறை : 

  • கணினி வாயிலாக தகுதி தரவு நடத்தி மதிப்பெண் அடிப்படியில் வேலை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி – 12 ஜூன் 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 02 ஜூலை 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • தமிழ்நாடு மருத்துவ துறை ஆட்சேர்ப்பு தளமான TNMRB (Tamil Nadu Medical Services Recruitment Board) இன் அதிகாரபூர்வ தளமான mrbonline.in க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் வெளியிப்படட்ட உரிய வேலைவாய்ப்பு லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பயனர்கள் தங்கள் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , உறுதி அறிக்கை) குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

HMPV குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை :  சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…

3 minutes ago

BGT தொடர் தோல்வி… ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…

19 minutes ago

இனிமே ஹீரோவாதான் நடிப்பேன்! ஆதங்கத்துடன் முடிவை கூறிய கலையரசன்!

சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…

48 minutes ago

சவுதி அரேபியாவை திருப்பி போட்ட பேய் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா.!

மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…

1 hour ago

திமுக கொடியில் இருக்கும் கருப்பை நீக்க முடியுமா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…

1 hour ago

நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 30க்கும் மேற்பட்டோர் பலி!

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…

2 hours ago