கோவை கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் JRF பணி ..! 20,000 சம்பளம் … பிஎஸ்சி பட்டம் கட்டாயம்!
ICAR-SBI கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2024 : கரும்பு வளர்ப்பு நிறுவனம் (ICAR-SUGARCANE BREEDING INSTITUTE) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 6 JRF, ப்ராஜெக்ட் ஃபெலோ பணியிடங்களை நியமிக்க முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த பணியில் வேலைக்கு சேர வாக்-இன்-இன்டர்வியூ அடிப்படையில் தேர்வு செயல்முறையை நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு தேவைகள், தேர்வு மற்றும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் | காலியிடங்கள் எண்ணிக்கை |
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ | 1 |
ப்ராஜெக்ட் ஃபெலோ | 5 |
தேவையான கல்விதகுதி
- ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ : வாழ்க்கை அறிவியலில் நெட் தகுதி பெற்ற முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ப்ராஜெக்ட் ஃபெலோ : வேளாண்மை, பயோடெக்னாலஜி, தாவர வளர்ப்பு, வாழ்க்கை அறிவியல், அடிப்படை அறிவியல், உயிர்வேதியியல், உயிர் தகவலியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல்/இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகள் முடித்திருக்கவேண்டும்.
வயது வரம்பு
- இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரரின் வயது 30-ஆக இருக்கவேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
பதவியின் பெயர் | சம்பளம் |
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ | மாதம் ரூ.31,000 |
ப்ராஜெக்ட் ஃபெலோ | மாதம் ரூ.20,000 |
விண்ணப்பம் செய்வது எப்படி?
- இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
- பின் அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை க்ளிக் செய்யுங்கள்.
- அதற்கு பிறகு உங்களுக்கு இந்த வேலை தொடர்பான விண்ணப்ப படிவம் வரும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான உங்கள் ஆவணங்களை வைத்து நிரப்பி கொள்ளுங்கள்.
- நிரப்பிய பிறகு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்துவிட்டு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.
முக்கியமான நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 01-08-2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 12-08-2024 |
முக்கிய விவரங்கள்
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | க்ளிக் |
விண்ணப்ப படிவம் | க்ளிக் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் |