பயணிகள் கவனத்திற்கு ! ரயில்வேயில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!

Default Image

ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு குரூப் D புதிய தேர்வு ஜூலை 2022 (CEN RRC 01/2019):

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப  கணினி அடிப்படையிலான தேர்வு  நடத்த உள்ளது.

RRB குரூப் D தேர்வு  ஜூலை 2022 ல் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடத்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் திட்டமிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

இந்திய ரயில்வே பிரிவுகளில் 1,03,769 காலியிடங்கள்உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.

RRB குரூப் D  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதள முகவரி https://www.rrbcdg.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) அட்டவணை மற்றும் அனுமதி அட்டை ஆகியவை ரயில்வே அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

இந்த CBT தேர்வானது  ஜூலை 2022-ல் தொடங்கி பல கட்டங்களில் நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு  10 நாட்களுக்கு முன்பு, தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வின் தேதியை பார்ப்பதற்கான இணைப்பு மற்றும் SC/ST மாணவர்களுக்கான தங்களுக்கு தேவையான விவரங்களை RRB இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கணினி அடிப்படையிலான சோதனைகள் ,உடற்திறன் தேர்வு,ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவை RRB குரூப் D செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

தேர்வின் கேள்விகள்,மற்றும் கால அளவு:

பொருள் கேள்விகளின் எண்ணிக்கை – தலா 1 மதிப்பெண் கால அளவு
பொது அறிவியல் 25 1 மணி 30 நிமிடம்
கணிதம் 25 1 மணி 30 நிமிடம்
பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு 20 1 மணி 30 நிமிடம்
பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு விவகாரங்கள் 30 1 மணி 30 நிமிடம்
மொத்தம் 100

 

இந்த RRB குரூப் D 2022 வேலை வாய்ப்பு, இந்திய ரயில்வேயில் நல்ல ஊதியத்துடன்  அரசுப் பணியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்